உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
46. உழைச்சன விலாவணை |
|
70 அடங்காத் தானை
யவந்திய ரிறைவற்
காருயி ரன்ன வரும்பெறன்
மடமகள்
வால்வளைப் பணைத்தோள் வாசவ
தத்தையை
வலிதிற் கொண்ட வத்தவ
ரிறைவனை
நலிதற் கெழுந்த நண்ணா விளையரைக்
75 கடல்விலக் காழியிற் கலக்க
மின்றி
அடல்விலக் காள ரார்த்தன ரடர்ப்பவும்
|
|
(இதுவுமது) 70
- 76: அடங்கா..........அடர்ப்பவும்
|
|
(பொழிப்புரை) இங்ஙனமாகப்
பகைவர்க் கடங்காத பெருவலி படைத்த படைகளையுடைய அவந்தி நாட்டரசனாகிய
பிரச்சோதனனுக்கு ஆருயிர்போன்ற பெறற்கரிய இளமகளாகிய சங்க வளையலையும்
மூங்கில்போன்ற தோளையுமுடைய வாசவதத்தையை வலிந்து கைப்பற்றிக்
கொண்டுபோன வத்தவநாட்டு மன்னனாகிய உதயணனைத் தடுத்து வருத்துதற்கு
வந்த பகைமறவரை எல்லாம் நிலத்திலே ஏறவொண்ணாதபடி கடலைத்
தடுக்கும் கரை போன்று அவர் செய்யும் போரினைத் தடுக்கவென்று
அமைக்கப்பட்ட வத்தவநாட்டு வித்தக வீரர்கள் ஆரவாரித்துப் போர் செய்து
தொலையா நிற்பவும் என்க.
|
|
(விளக்கம்) அவந்தியரிறைவன் - பிரச்சோதனன். வத்தவரிறைவன் - உதயணன்.
நண்ணாவிளைஞர் - பகைமறவர். ஆழி - கரை. அடல் -
போர்.
|