உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
46. உழைச்சன விலாவணை |
|
கடிகமழ்
நறுந்தார்க் காவலன்
மகளைப்
பிடிமிசைக் கொண்டவன் பெயரு
நேரத்து முடிமுத
லண்ணலை முந்தினன் குறுகித்
தொடிமுதற் றிணிதோ டோன்ற வேர்ச்சி
105 வலமுறை வந்து பலமுறை பழிச்சி
|
|
(இதுவுமது) 101
- 105: கடி...........பழிச்சி
|
|
(பொழிப்புரை) நறுமணங்
கமழும் நறிய மலர்மாலையணிந்த பிரச்சோதன மன்னனுடைய மகளாகிய
வாசவதத்தையைத் தனது பிடி யானையின் மேலேற்றிக் கொண்டவனாகிய
உதயணகுமரன் தன்னூர் நோக்கிச் செல்லாநின்ற செவ்வியிலே முடிவேந்தனாகிய
அம் முதல்வனுக்கு எதிரே சென்று நெருங்கித் தன் மகிழ்ச்சிக்கு
அறிகுறியாகத் தனது தொடியணிந்த திணிந்த தோளை அவனுக்குத் தோன்றுமாறு
உயர்த்தி அவனை வலமாக வந்து பலமுறையும் வணங்கி என்க
|
|
(விளக்கம்) காவலன் -
பிரச்சோதனன். அம்முடி முதலண்ணலை என்க. தோளை யுயர்த்துவது தாமுற்ற
வெற்றிக்கு அறிகுறியாதற்கு என்க. பழிச்சி - வணங்கி.
|