உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
46. உழைச்சன விலாவணை |
|
திருமா
தேவி பெருநகர்
வரைப்பினும்
செருமாண் வென்றிச் செல்வன்
பக்கமும்
மையார் கண்ணியை யொய்யா னாகிக்
205 கையிகந் தனனாற் காவலன்
மகனெனக்
காற்றினு மெரியினு மேற்ற
வார்ப்பினும்
நாற்றிசை மருங்கினு நண்ணல்
செல்லார் பகலிட
மருங்கிற் பகுதியைக்
கெடுத்த
அகலிடம் போல வச்ச மெய்திப்
210 படைமலர்த் தடங்கண் பனிசுமந்து
வீழ
இடைமுலைக் கிடந்த வேக
வல்லி
முற்றுறு கழங்கொடு முதலகடு
பொருந்திப்
பற்றிடம் பெறாது பாம்பெனப்
பதைப்ப
வெருவுறு மஞ்ஞையிற் றெருமந் திகலிப் 215
பழிப்பில் கம்மியன் பசும்பொனிற்
புனைந்த
கொடிப்பல விரீஇய கொழுந்துபடு
கோலத்துக்
கொட்டங் கொண்டோர் கட்டழ
லுயிரா
விட்டகன் றனையோ வேந்தனொ
டின்றெமை
மட்டுவார் கோதாய் மறந்தென மாழ்கவும்
|
|
(கொட்டந்தாங்கிய பணிமகளிர் வருந்துதல்)
202 - 219: திருமா..........மாழ்கவும்
|
|
(பொழிப்புரை) குற்றமற்ற கம்மியன் பசிய பொன்னாலியற்றிய பூங்கொடியோவியம் பலவாக விரித்துக் கொழுந்துகள் தோன்றப் பொறித்த கோலத்தையுடைய கொட்டங்களை ஏந்திய பணி மகளிர் வத்தவமன்னன் மகனாகிய உதயணகுமரன் மையூட்டப்பட்ட கண்களையுடைய நம் வாசவதத்தையைத் தன் பிடிமேலேற்றியவன், கோப்பெருந்தேவி வதியும் பெரிய உவளகத்திற்காதல், அல்லது போர்த்தொழிலில் மாண்புடைய வெற்றியையுடைய செல்வனாகிய
நம் மன்னன் பக்கலிலாதல், கொண்டுபோய்ச் சேர்த்தலிலனாய் நம் கைகடந்து அவளைக் கொடுபோயினன் என்றுணர்ந்து சூறைக்காற்றானும் தீயினானும் மாந்தர் மேற்கொண்ட ஆரவாரத்தானும் நான்கு திசைகளுள் வைத்து எத்திசையினும் செல்லாதவராய்ப் பகற் பொழுதிலேயே ஞாயிற்று மண்டிலத்தை இழந்துவிட்ட அகன்ற உலகம் போன்று பெரிதும் அச்சமெய்திக் காமவேள் படைக்கலமாகிய மலர் போன்ற தம் பெரிய கண்களில் நீர்த்துளிகள் பெருகி விழாநிற்பவும், தமது முலையிடையே கிடந்த ஏகவல்லி என்னும் ஒற்றைவடம் முழுமையுடைய கழற்சிக்காய் மாலையோடு தம் வயிற்றின்கண் வீழ்ந்து பொருந்தித் தங்குமிடம் பெறாமல் பாம்பு போன்று அசையாநிற்பவும் அஞ்சுதலுற்ற மயிலினம் போன்று மனஞ் சுழன்று மாறுபட்டு "கள்ளொழுகும் மலர் மாலையினையுடையோய்! இன்று எளியேங்களை மறந்து கைவிட்டு நின் காதலனாகிய மன்னனோடு சென்று விட்டாயோ?" என்று கதறியழுது கட்டழல்போன்று வெய்துயிர்த்து மயங்காநிற்பவும் என்க.
|
|
(விளக்கம்) திருமாதேவி: பதுமகாரிகை. செல்வன்: பிரச்சோதனன், மையார்கண்ணி: வாசவதத்தை ஒய்யானாகி - செலுத்தானாகி. காவலன் மகன்: உதயணன். பருதி - ஞாயிறு. ஏகவல்லி - ஒற்றைவடம். கழங்கு - கழற்சிக்காய்மாலை. அகடு - வயிறு. தெருமந்து - சுழன்று. வீரிஇய - விரித்தெழுதிய. கொட்டம் - குங்குமம் மஞ்சள் முதலியன வைக்கும் ஒருவகைப் பெட்டி. இப்பெட்டி பனங்குருத்தால் செய்யப்படும்; ஈண்டுப் பசும் பொன்னாற் செய்யப் பட்டது. வேந்தன்: உதயணன்.
|