உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
46. உழைச்சன விலாவணை |
|
220 சிறுபுறங் கவைஇச்
சீப்பின் வாரிக்
குறுநெறிக் கொண்ட கூழைக்
கூந்தலுள்
நறுமலர்க் கோதை நான்றுவந்
தசைஇ
வடுப்போழ்ந் தன்ன வாளரி
நெடுங்கண்
குமிழ்த்தெழு வெம்பனி கோங்கரும் பேய்ப்ப
225 முகிழ்த்தன் முன்னிய முலைமுதன்
முற்றத்து வரித்த
சாந்தின் வண்ணஞ்
சிதைப்பச்
செறிதொடர் கொளீஇய சித்திரக்
கம்மத்துப்
பொறியமை புடைசெவிப் போழ்வாய்
மணிக்கண் அருங்கய
லடைப்பை யங்கையி னேந்திப் 230
பெருங்கட் பேதைய ரிருந்துய ரெய்தவும்
|
|
(அடைப்பை
தாங்கிய பேதை மகளிர்
வருந்தல்)
220 - 230: சிறுபுறம்..........எய்தவும்
|
|
(பொழிப்புரை) பெரிய
கண்களையுடைய அடைப்பை தாங்கும் பேதைப் பருவத்துமகளிர் தமது முதுகினை
மறைக்கும்படி சீப்பினாலே வாரப்பட்டுக் குறிய நெறிப்பினைக் கொண்ட
கூழையாகிய தமது கூந்தலுள் செருகப்பட்ட நறிய மலர்மாலை நழுவிவந்து தூங்கி
அசையா நிற்பவும், மாவடுவைப் பிளந்து வைத்தாற்போன்றனவும் வாள்
போன்றனவும் ஆகிய தமது செவ்வரி படர்ந்த நெடிய கண்களிலே குமிழ்த்து
எழாநின்ற வெப்பமுடைய கண்ணீர்த்துளிகள், வீழ்ந்து கோங்கினது அரும்பு
போல முகிழ்த்தலைக் கொண்ட தமது முலையினது முகப்பிலே எழுதப்பட்ட சந்தனக்
கோலத்தின் அழகினைச் சிதையாநிற்பவும், செறிந்த சங்கிலி கொளுவப்பட்ட
சித்திரத் தொழிலோடு திறக்கவும் மூடவும் இயந்திரமாக அமைந்த புடைத்த
செவிகளையும், தகடுகளாலாய வாயையும், மணிகளானியன்ற கண்களையு
முடைய அரிய கயல்மீன் வடிவிற் செய்யப்பட்ட அடைப்பைகளைத் தமது அழகிய
கையிலேந்திச் செயலற்றிருந்து பெரிய துயரத்தை எய்தாநிற்பவும் என்க.
|
|
(விளக்கம்) கவைஇ - கவவ
என்க. நெறி - நெறிப்பு. கூழை - பேதைப் பருவத்துப் பெண்ணின் கூந்தல்.
அசைஇ - அசைய என்க. முற்றம் - முகப்பு. தொடர் - சங்கிலி. பொறி -
பூட்டவும் திறக்கவுமமைந்த இயந்திரம். புடைத்த செவி என்க. போழ் - தகடு.
அடைப்பை - வெற்றிலைப்பை. பேதையர் - பேதைப் பருவத்து மகளிர்.
|