உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
47. உரிமை விலாவணை |
|
இன்னா வின்பத் தியற்கை
யென்னென
மன்னவன் வினாய மாத்திரைக் கண்ணே
|
|
(பிரச்சோதனன்
வினவுதல்)
16 - 17: இன்னா..........கண்ணே
|
|
(பொழிப்புரை) அது கேட்ட
பிரச்சோதனமன்னன் நிமித்திகனை நோக்கி "நின்னாற்
கூறப்படும் அவ்வின்னாமையையுடைய இன்பந்தான் எத்தகையது?
கூறுக!" என்று வினவிய பொழுதே என்க.
|
|
(விளக்கம்) இந்நிகழ்ச்சி எதுபற்றி நிகழும் என்று வினவியபடியாம்.
|