உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
47. உரிமை விலாவணை |
|
தேற்றின மேற்றலுங் காற்றெனக் கடாஅய்
85 எம்மொடு படாஅ னிந்நகர்
குறுகான்
தன்னகர்க் கெடுத்த தருக்கின
னாதலின்
ஆயிரத் தைவர் காவற்
காளையர்
மாயிரு ஞாலத்து மன்னுயி
ருண்ணும்
கூற்றெனத் தொடர வேற்றுமுன் விலங்கி
90 வயவ ரென்றியாம் வகுக்கப்
பட்டோர்
பயவ ரன்றிப் பணிந்தவர்
தொலைய
வென்றி யெய்திக் கொன்றுபலர்
திரிதரப்
பின்றையு நின்றியான் பிடிப்பின் செல்வுழி
|
|
(இதுவுமது)
84 - 93:
ஏற்றலும்...........செல்வுழி
|
|
(பொழிப்புரை) பெருமானே இவ்வாறு
யாங்கள் வாசவதத்தையை ஏற்றியவுடனேயே அவ்வுதயணன் எங்களோடும்
பொருந்தாதவனாகவும் இந்த அரண்மனையை அணுகாதவனும் ஆகி
அப்பிடியானையைக் காற்றுப் போல விரையச் செலுத்தித் தனது நகர்
நோக்கிக்கொடுபோகும் செருக்குடையன் ஆகக் கண்டேம். அங்ஙனம் ஆதலின்
காவற்றொழிலை மேற் கொண்ட ஆயிரத்தைவராகிய நங்காளை மறவர் வெகுண்டு
பெரிய உலகத்துயிர்களையுண்ணும் கூற்றுவன் போன்று அவனைப்
பின் தொடரா நிற்பப் போர் மறவர் என்று யாம் மதித்து வகுத்து
விடப்பட்ட அம்மறவரெல்லாம் பயன் படாதவ ராகும்படி பகை மறவர் பலர் அவர்
முன்னர் ஞெரேலெனத் தோன்றிக் கடும்போர் செய்து நம்மால் போர் மறவர்
என்று மதித்து வகுத்து விடப்பட்ட நம்மறவரெல்லாம் தம்மைப் பணியவும்
புறங்காட்டி ஓடவும் ஓடாதவரைக் கொன்று வீழ்த்தியும் செய்து வெற்றி எய்தி
யாண்டுஞ் செருக்கித் திரிதராநிற்றலாலே யான்மட்டுமே ஒருவாறு எஞ்சிநின்று
அப் பிடியானையைப் பின்தொடர்ந்து செல்லும்பொழுது என்க.
|
|
(விளக்கம்) இந்நகர் என்றது அரசனிருக்கும் அம்மாளிகையினை, எடுத்த - கொடுபோகும்.
வயவர் அலர் : என்றிகழ்வான் வயவரென்றியாம் வகுக்கப்
பட்டோர் என்றான். பயவர் -
பயனுடையோர்.
|