உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
47. உரிமை விலாவணை |
|
அடுத்த காத லணங்கைத் தந்தவன்
95 விடுக்கப் போந்தனென் மீண்டிது
கூறெனத்
தடக்கை கூப்பிநின் னடித்திசைக்
கிறைஞ்ச
ஒழிந்தியான் வந்தனெ னிகழ்ந்ததை
நினைப்பினோர்
மாயம் போலுங் காவல வருளென
|
|
(இதுவுமது)
94 - 98:
அடுத்த..........அருளென
|
|
(பொழிப்புரை) அவ்வுதயணன் என்னைத்
திரும்பி நோக்கி, "வராக, என்பால் தொடர்ந்த காதலையுடைய
இவ்வாசவதத்தையை அம்மன்னவன் என்பாற் கொடுத்து விடைகொடுத் தலாலேயே
நான் அவளோடு செல்கின்றேன் காண் ஆதலால் நீ மீண்டுபோய்
இவ்வணக்கத்தைக் கூறுக ! என்று கூறித் தனது பெரிய கைகளைக் கூப்பிப்
பெருமான் திருவடியிருந்த இத்திசை நோக்கி வணங்கக் கண்டு யான் பின்
சேறலொழிந்து வந்தேன். நிகழ்ந்த இந்நிகழ்ச்சிகளை யெல்லாம் நினைந்து
பார்க்கும் பொழுது ஒரு இந்திரசாலம் போலத் தோன்றும்; பெருமானே ! அருள்
செய்க !" என்று கூறாநிற்ப என்க.
|
|
(விளக்கம்) அவன் -
பிரச்சோதனன்: காதலணங்கு - வாசவதத்தை. அவன் தந்து விடுக்கப்
போந்தனென் என மாறுக. மாயம் - மாயச்
செயல்
|