உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
47. உரிமை விலாவணை |
|
அரசு
கொற்றத் தருங்கடம்
பூண்ட
முரசெறி வள்ளுவ முதியனைத்
தரீஇக்
கார்பனி துளித்துக் கதிர்கண்
புதைஇய
வார்பனி மாலைநம் வளநகர்
புகுதல்
புனலாடு விழவிற் பொலிவின் றாதலின்
160 கோலங் குயிற்றிக் கோடணை
யியற்றிக்
காலை புகுதல் காவலன்
பணியெனத்
துறைநக ரறியப் பறையெடுத் தறைகெனச்
|
|
(இதுவுமது) 155 - 162:
அரசு..........அறைகென
|
|
(பொழிப்புரை) அரசனுடைய வெற்றிக்கு
முதன்மையான தொழிற் கடமை பூண்ட முரசமுழக்கும் வள்ளுவமுதியோனை
வரவழைத்து "வள்ளுவ முதியோய், முகில் துளிக்கப்பட்டு ஞாயிற்று மண்டிலம்
மறையாநின்ற நெடிய பனியையுடைய இம்மாலைப் பொழுதிலே நம்முடைய வளப்பமிக்க
உஞ்சை நகரத்தே நாம் சென்று புகுதல் இந்நீராட்டு விழவிற்குப்
பொலிவுதாராதாகலின் நீ சென்று ஒப்பனை செய்து முரசத்தை அமைதி
செய்துகொண்டு ''எல்லோரும் நாளைக் காலைப் பொழுதிலே நகரம் புகுதல்
வேண்டும். இது மன்னவன் கட்டளையாகும்'' என்று முரசறைந்து இத்துறைப்
புது நகரத்துள்ளோர்க்கு அறிவிப்பாயாக !" என்று பணித்து என்க.
|
|
(விளக்கம்) கோலம்
- முரசறைதற் பொருட்டுச் செய்து கொள்ளும் ஒப்பனை. துறைநகர் -
துறைமருங்கமைத்த புதிய நகரம்.
|