உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
47. உரிமை விலாவணை
 
         
           பள்ளிக் கோயிலுட் பல்லிய மெடுப்ப
     165    ஆய்பூஞ் சேக்கையு ளருமணி சுடரப்
           பாயல் கோடல் பலரறி வுறீஇய
           கைக்கோ லிளையருங் காஞ்சுகி முதியரும்
           அகக்கோ ளாளரொ டருமறை யாகப்
           பண்டிவட் புகூஉம் பொங்குபுனல் விழவணி
     170    அன்றவ ணிலனா யாவித் திழிந்த
           இந்திர குமர னியற்கைய னாகிக்
           கஞ்சிகைச் சிவிகையுட் கரணத் தொடுங்கி
 
             (இதுவுமது)
        163 - 172: செல்..........ஒடுங்கி
 
(பொழிப்புரை) கதிரவன் மறையாநின்ற அவ்வந்திப் பொழுதிற் செய்தற்குரிய நற்கடனெலாம் செய்து முடித்துப் பள்ளியறையையுடைய அரண்மனையிலே பலவாகிய இன்னிசைக் கருவிகளும் முழங்கா நிற்பவும் ஆராய்ந்து பரப்பிய மலர்ப்படுக்கையின் மருங்கே அரிய மணிவிளக்கங்கள் சுடரா நிற்பவும் தான் துயில் கோடலைப் பலரும் அறியும்படி கையிற் பிரப்பங்கோலேந்திய இளமறவரும் காஞ்சுகி முதியரும் அகம்படிமைத் தொழின் மகளிரோடே தன்னைச் சூழ்ந்து அரிய மறைப்பாகப் பண்டெல்லாம் இந்நீர் விழாவின்கண் இங்குப் பள்ளிக் கோயிலின்கண் புகாநின்ற முறைப்படி புகுதலை அன்று தவிர்ந்தவனாய், துயரத்தாலே பெருமூச்செறிந்து நிலத்தின்கண்ணிறங்கிய ஒரு தேவகுமாரன் போன்று உருவு திரையிட்டு மறைத்ததொரு சிவிகையிலே ஏறி மன முதலிய அகக்கருவிகளும் ஒடுங்கிச் சென்று என்க.
 
(விளக்கம்) சுடர் செல் அந்தி யென்க. நல்லியல் - நல்லியல்புடைய அந்திக் கடன்.பள்ளிகொள்ளுதற்குரிய கோயில். அகக்கோளாளர் - அகம்படி மகளிர். ஆவித்து - மூச்செறிந்து. கஞ்சிகைச் சிவிகை - திரையான் மறைத்த சிவிகை. கரணம் - உட்கருவிகள்.