| உரை | 
|  | 
| 1. உஞ்சைக்காண்டம் | 
|  | 
| 48. மருதநிலங் கடந்தது | 
|  | 
| புடைப்போர்ப் 
      புளகத் துடப்புமறைப் 
      பருமத்துத் தீப்படு 
      கரணத்துக் கணைவிடு 
      விசைய
 செய்வினைத் 
      தச்சன் கைவினைப் பொலிந்த
 10    
      வேற்றவ ரொல்லென வேற்றினன் 
      பாய்த்துள
 கண்டிரள் 
      கலினமொடு பிணடிகைக் 
      கவ்வித்
 திரைத்தலைப் பிதிர்வி னுரைக்கும் 
      வாயின
 கற்றோர்க் 
      கமைந்த கருவி 
      மாட்சிய
 பொற்றா 
      ருடுத்த பொங்குமயிர்ப் புரவி
 | 
|  | 
| (குதிரைகள்) 7 - 14 :  புடை..........புரவி
 | 
|  | 
| (பொழிப்புரை)  பக்கங்களிலே 
      போர்த்துதலையுடைய உடல்   மறையாகிய சேணத்தையுடையனவும் தீக்காலும் 
      வெகுளியோடு   போர்த்தொழில் புரியா நிற்பனவும் அம்புபோல விரைந்து 
        செல்லுவனவும்  செய்யாநின்ற தொழிற்றிறனமைந்த   
      தச்சனாலியற்றப்பட்ட ஒப்பனையாற் பொலிவுடையனவும், பகைவர்   அஞ்சி 
      ஒல்லென்று கதறும்படி ஆண்சிங்கம் போன்று அவர்மேற்   பாயா நின்ற 
      பாய்தலையுடையனவும், திரண்ட இடத்தையுடைய   கடிவாளத்தோடு பிண்டிகையையும் 
      கவ்வி அலையினுச்சியிலே பிதிரா   நின்ற நுரைபோன்று நுரைக்கும் வாயை 
      யுடையனவும், தம்மை   ஊர்தற்கு நன்கு பயின்ற வலவர்க்கு அடங்கி யொழுகுவனவும், 
        தொகுதிகளாலே மாண்புடையனவும், பொன்னாலியன்ற கிண்கிணி   
      மாலை பூண்டனவும், மிக்க பிடரி மயிரையுடையனவும் ஆகிய   புரவிகளும் 
என்க. | 
|  | 
| (விளக்கம்)  புடை-பக்கத்தே. 
      போர் - போர்த்துதல்.உடப்பு  - உடம்பு. பருமம் - சேணம், கரணம் - செயல்: 
      கைவினை -   ஒப்பனை. வேற்றவர் - பகைவர். ஏற்றின் - ஆண்சிங்கத்தின். 
        பாய்த்துள - பாய்தலையுடையன. கலினம் - கடிவாளம். பிண்டிகை   - 
      செம்பஞ்சித்திரி. பிதிர்வு - நுரை. கருவி - போர்க் கருவியுமாம்.   தார் 
      - கிண்கிணிமாலை. |