உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
48. மருதநிலங் கடந்தது |
|
விரிகதிர்
பரப்பி வியலகம்
விளக்கும்
பரிதி ஞாயிறு பல்லவர்
காணின்
அற்றந் தருமென வருள்பெற்
றதுபோற்
கொற்ற வெங்கதிர் குளிர்கொளச் சுருக்கிக்
45 குண்டகன் கிடக்கைக் குடகடற் குளிப்ப்
|
|
(ஞாயிறு
மறைதல்)
41 - 45 : விரி..........குளிப்ப
|
|
(பொழிப்புரை) யாண்டும்விரிகின்ற
தன்னுடைய கதிர்களைப் பரப்பி அகன்ற உலகத்தை விளக்காநின்ற வட்ட
வடிவமான ஞாயிறு இவ்வுதயணன் வாசவதத்தையைக் கைப்பற்றிக்கொண்டு
போதலை உலகில் பலரும் காணின் ஒரோவழி அக்காட்சி இவனுக்குச் சோர்வை
யுண்டாக்கும் என்று அவன்பால் அருள் உடையது போலத் தனது வெற்றியுடைய
வெவ்விய கதிர்களை உலகம் குளிர்ச்சி எய்தும்படி சுருக்கிக் கொண்டு
ஆழ்ந்தகன்ற இடக்கையையுடைய மேலைக் கடலிலே மறையா நிற்ப என்க.
|
|
(விளக்கம்) இது
தற்குறிப் பேற்றம். பரிதி - வட்டம். பல்லவர் - பலர். அற்றம் -
சோர்வு. வலகம் குளிர்கொள என்க. குண்டு ஆழம். குடகடல்
மேலைக்கடல்.
|