|
உரை | | 1. உஞ்சைக்காண்டம் | | 48. மருதநிலங் கடந்தது | | உழவ
ரொலியுங் களமர்
கம்பலும்
வளவய லிடையிடைக் களைகளை
கடைசியர்
பதலை யரியல் பாசிலைப்
பருகிய
மதலைக் கிளியின் மழலைப் பாடலும் 165
தண்ணுமை யொலியுந் தடாரிக்
கம்பலும்
மண்ணமை முழவின் வயவ
ரார்ப்பும்
மடைவாய் திருத்து மள்ளர்
சும்மையும்
இடையற வின்றி யிரையாறு
தழீஇ
வயற்புலச் சீறூ ரயற்புலத் தணுகி 170
மருதந் தழீஇய மல்லலம் பெருவழி
| |
(இதுவுமது) 161
- 170 : உழவர்...............பெருவழி
| | (பொழிப்புரை) உழவர்
பாடும் ஏர் மங்கலப் பாடல் ஒலியும், களத்திற றொழில் செய்வோர்
செய்யும் ஆரவாரமும், வளமிக்க வயல்களிடத்தே இடையிடையே முளைக்கும்
களைகளைக் களையா நின்ற உழத்தியர் பதலையிற் கொணர்ந்த கள்ளைப் பசிய
தாமரை இலைகளைக் குடையாக்கிப் பெய்து பருகிய களிப்பினாலே பாடா நின்ற
இளங்கிளிகள் மிழற்றினாற் போன்ற மழலை மொழிகளமைந்த பாடலின்
ஆரவாரமும், தண்ணுமை முழக்கமும், தடாரி முழக்கமும், மண் பூசப்பட்ட
முழவினையுடைய மறவர் ஆரவாரமும், மடைகளை உடைய வாய்க்கால்களைத்
திருத்தாநின்ற மள்ளருடைய ஆரவாரமும், இடையீடின்றி முழங்கா நின்ற ஆற்றினது
ஆரவாரத்தோடு இயைந்து பெரு முழக்கமுடைய வயல் நிலமமைந்த சிறிய சிறிய
ஊர்களினது பக்கத்தே சென்று அம்மருத நிலத்தைப் பொருந்திக் கிடந்த
வளப்பமிக்க அழகிய வழியிலே என்க.
| | (விளக்கம்) களமர் -
களத்திற் றொழில் செய்வோர். களையைக் களைகின்ற என்றறிக. கடைசியர்
- உழத்தியர். பதலை - கள்மொந்தை. தடாரி - கிணைப் பறை. இரையாறு :
வினைத்தொகை. மல்லல் - வளம்.
|
|