மூலம்
உரை
1. உஞ்சைக்காண்டம்
48. மருதநிலங் கடந்தது
அருட்ட நகரத் தல்கூ ணமயத்
தஞ்சொன் மகளி ரடிமிசை யாற்றும்
பைம்பொற் பகுவாய்க் கிண்கிணி யொலியும்
மையணி யிரும்பிடி மணியும் பாடவித்
185 தெய்தினன் மாதோ விருளிடை மறைந்தென்.
(இதுவுமது)
181 - 185 : அல்கூண்...........மறைந்தென்
(பொழிப்புரை)
அந்நகர் வாழ்வோர் இரவின்கண் உண்ணுதற்குரிய பொழுதின்கண் அழகிய சொல்லையுடைய வாசவதத்தையும் காஞ்சனையுமாகி மகளிரின் அடிமேற் கிடந்து முரலாநின்ற பசிய பொன்னாலியன்ற பிளவுபட்ட வாயையுடைய கிண்கிணி யொலியையும் கரிய அழகிய பெரிய பிடியானையின் ஒலி மணியோசையையும் அவித்து இருளிடையே அந்நகரத்தார் காணாதபடி மறைந்து எய்தினன் என்க.
(விளக்கம்)
அல்கூண் - இரவூண். பிடிமணி - பிடியிற் கட்டிய ஒலி மணி. பாடு - ஒலி. இருளிடை மறைந்து எய்தினன் என்க.
48. மருதநிலம் கடந்தது முற்றிற்று.