உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
49. முல்லை நிலங் கடந்தது |
|
துறைவளங்
கவினிய நிறைவளப் படுவிற்
செல்வ மருதத் தொல்லையு ளிருந்த
20 தொல்லருஞ் சிறப்பினிம் மல்லன்
மாநகர் அகப்பட்
டியங்குந ரச்ச
நீக்கிப் புறப்பட்
டியங்குநர்ப் புன்கண்
செய்யும்
காப்புவினை யுடைத்தே யாப்புற
விதனை இடத்திட்
டேகுது மெனினே யெங்கும்
|
|
(இதுவுமது)
18 - 24:
துறை..........எனினே
|
|
(பொழிப்புரை) பெருமானே!
கேட்டருள்க!, நீர்த்துறைகளினால் வளஞ் செறிந்து அழகுற்ற, நிறைந்த
வளமுடைய மடுக்களை உடைய செல்வ மிக்க இம்மருதப் பரப்பின் முடிவின்கண்
அமைந்திருந்த பழையதாகிய அரிய சிறப்பினையுடைய வளமிக்க இந்த அருமடமா
நகரம் தன்னகத்தே அடங்கி இயங்கு மக்கட்கு அச்சத்தை அகற்றித்
தன்புறத்தே இயங்கு மக்களைப் பெரிதும் துன்புறுத்தும் காவற்றொழிலை
யுடையதாகும். இந்த நகரத்தை நம் இடப்பக்கத்தே வைத்து நாம் இதன்
வலப் பக்கத்தே கட்டுப் பாட்டோடு செல்வேமாயின் என்க.
|
|
(விளக்கம்) அகப்பட்டு புறப்பட்டு என்பனவற்றிற்கு அதன்
ஆட்சியிலகப்பட்டு என்றும் அதற்கு வெளிப்பட்டு என்றும் கூறினுமாம். யாப்புற
- கட்டுப்பாட்டோடு. இதனை - இந்நகரத்தை.
|