| உரை | 
|  | 
| 1. உஞ்சைக்காண்டம் | 
|  | 
| 49. முல்லை நிலங் கடந்தது | 
|  | 
| ஆலி 
      வெண்மண லணிபெறத் தூஉய்க் 85    கோல 
      வனப்பிற் கோடணை 
      போக்கி
 அதிர்குரன் முரசி னதிர்த 
      லானாது
 தூநிறத் 
      தண்டுளி தானின்று 
      சொரிந்து
 வேனி 
      றாங்கி மேனி வாடிய
 மண்ணக மடந்தையை மண்ணுநீ ராட்டி
 90    
      முல்லைக் கிழத்தி முன்னரு 
      ளெதிரப்
 பல்லோர் 
      விரும்பப் பரந்துகண் 
      ணகன்று
 பொருள்வயிற் பிரிந்து பொலங்கல 
      வெறுக்கையொ
 டிருள்வயின் வந்த வின்னுயிர்க் 
      காதலன்
 மார்பக 
      மணந்த நேரிழை மடந்தையர்
 95    மருங்குல் 
      போலப் பெருங்கவி 
      னெய்திய
 சிறுகொடி 
      யூழூழ் பரப்பி 
      மற்றவர்
 முறுவ 
      லரும்பிய முல்லை யயல
 | 
|  | 
| (இதுவுமது)                 
      84 - 97: ஆலி..........அயல
 | 
|  | 
| (பொழிப்புரை)  ஆலியாகிய 
      வெள்ளிய மணலை அழகுண்டாக யாண்டும்   பரப்பிக் கோலஞ்செய்த அழகுடனே 
      ஒப்பனை செய்து அதிர்கின்ற   ஓசையையுடைய முரசுபோன்று இடிமுழக்கஞ் செய்தலமையாது,          வெண்ணிறமுடைய மழைத்துளியை நின்று சொரிந்து வேனிலினது 
        வெப்பத்தைத் தாங்கித் திருமேனி வாடிக்கிடந்த நிலமகளை மங்கல 
        நீராட்டி முல்லையாகிய அந்நிலக்கிழத்தி தனது தண்ணளியைப் பெற்று 
        மகிழா நிற்ப, உலகிற் பலரும் விரும்பும்படி பரவிவிரிந்து பொரு  
      ளீட்டற்குத் தம்மைப் பிரிந்து போன தங்கணவன்மார் நிரம்பப் பொரு  
      ளீட்டிக் கொண்டு பொன்னணிகலன்களோடும் பொருளோடும் மாலைப்  பொழுது இருள் 
      மயங்கும் பொழுதில் மீண்டு வந்தவரின் மார்பகத்தைத்   தழுவிய நேரிய 
      இழையையுடைய தலைவிமாருடைய பூரிப்பாற் சிறிது   தடித்த இடைகளைப் போன்று 
      பேரழகு படைத்த சிறிய சிறிய கொடிகளை   முறை முறையே தோற்றுவித்துப் பரப்பி 
      அத்தலைவிமார் எயிறுகள்   போன்று அரும்பிய முல்லைக் கொடிகளின் அயலிலே 
      உளவாகிய   என்க. | 
|  | 
| (விளக்கம்)   கார் காலம் ஒரு தலைவனாகவும், முல்லை நிலம் 
        தலைவியாகவும் அத்தலைவன் திரைகடலோடியும் திரவியந்தேடி   
      ஆரவாரத்தோடு மீண்டு வந்து பந்தல் முதலியன இயற்றித் தன்   தலைவியை அளி 
      செய்வதாகவும், அத்தலைவனாற் றழுவப்பட்ட   முல்லைத் தலைவி மெய் தளிர்த்து 
      முல்லை மலராகிய புன்முறுவல்   பூத்துப் பல்வேறு வளங்களையும் தருவதாகவும் 
      அமைந்த இவ்வுரு  வகம் கற்போர்க்குப் பெரிதும் இன்பம் தருவதாதலுணர்க. இருள் 
      -   இருள் மயங்கும் மாலைப் பொழுது. பெருங்கவின் - பேரழகு. மழை   
      வரவிற்குத் தலைவர் வருகையையும் உலகம் தழைத்தற்குத் தலைவியர்   
      மகிழ்ச்சியால் தழைப்பதனையும் உவமையாக்குதல் காண்க. ஊழூழ் -   முறை முறையே. 
      முறுவல் - பல். முறுவல் போன்று அரும்பிய என்க.   அயல: பலவறி 
      சொல். |