|
உரை | | 1. உஞ்சைக்காண்டம் | | 49. முல்லை நிலங் கடந்தது | | குரவுந்
தளவுங் குருந்துங் கோடலும்
அரவுகொண் டரும்ப வறுகால் வண்டினம்
100 அவிழ்பதம் பார்த்து மகிழ்வன
முரலக் கார்வளம்
பழுனிக் கவினிய
கானத் தேர்வளம்
படுத்த வெல்லைய
வாகி உறங்குபிடித்
தடக்கை யொருக்குநிரைத்
தவைபோல் இறங்குகுர
லிறடி யிறுங்குகடை நீடிக் 105
கவைக்கதிர் வரகும் கார்பயி
லெள்ளும் புகர்ப்பூ
வவரையும் பொங்குகுலைப்
பயறும் உழுந்துங்
கொள்ளுங் கொழுந்துபடு
சணாயும் தோரையுந்
துவரையு மாயவும் பிறவும்
| |
(முல்லை நிலம்)
98 - 108: குரவும்..........பிறவும்
| | (பொழிப்புரை) குராமரமும்
தளவும் குருந்தமரமும் பாம்பின் எயிறு போன்று மலரவும், காந்தள் பாம்பின்
படம் போன்று மலரவும் ஆறு கால்களையுடைய வண்டுகள் அம்மலர்கள் மலரும்
செவ்வி தெரிந்து மகிழ்ந்து இசைபாடா நிற்பவும், கார்ப் பருவம்
வந்துற்றமையாலே வளம் நிரம்பி அழகுற்ற அம்முல்லைக் கானத்தின் அழகிற்கு
எல்லை காட்டுவன வாகித் துயிலாநின்ற பிடியானையின் பெரிய கைகளை ஓரிடத்தே
நிரல் படுத்தினாற் போன்று வளைந்த கதிரையுடைய தினையும், நுனி நீண்ட
சோளமும், கவர்த்த கதிரையுடைய வாகும், கார்ப்பருவத்தே தழைக்கும்
எள்ளும், சிவந்த மலரையுடைய அவரையும், காய் மிகுந்த குலைகளை
யுடைய பயறும், உழுந்தும், கொள்ளும், கொழுந்து மிக்குத் தோன்றும்
கடலையும், தோரையும், துவரையும் ஆகிய இவைகளும் இன்னோரன்ன பிறவும்
என்க.
| | (விளக்கம்) குரல் - கதிர். இறடி - தினை. இறுங்கு - சோளம்.
புகர் - சிவப்பு. சணாய் - கடலை. தோரை - ஒருவகை
நெல்.
|
|