| உரை | 
|  | 
| 1. உஞ்சைக்காண்டம் | 
|  | 
| 51 நருமதை கடந்தது | 
|  | 
| 35    பன்மலைப் 
      பிறந்த தண்ணிற 
      வருவிய
 அமலை 
      யருங்கல மடக்குபு 
      தழீஇத்
 தன்னிற் 
      கூட்டிய தானைச் 
      செல்வமொ
 டிருகரை 
      மருங்கினும் பெருகுபு தழீஇ
 | 
|  | 
| (இதுவுமது)                
        35 - 38: பன்மலை............தழீஇ 
 | 
|  | 
| (பொழிப்புரை)  மேலும் பல்வேறு 
      மலைகளினும் தோன்றிய   ஆரவாரமும் குளிர்ந்த நிறமும் உடைய அருவிகள் 
      கொணர்ந்த   அணிகலன்களையும் தன்னுள்ளடக்கிக் கொண்டு தன்பால் வந்து 
        கலக்கும் ஏனைச் சிற்றாறுகளாகிய துணைப்படையோடுஞ் செல்வத்   
      தோடும் தனது இரண்டு கரையிடையே பெருகி அவற்றைத் தழுவிக்   
கொண்டென்க. | 
|  | 
| (விளக்கம்)  அருவிகள் கொணர்ந்த அணிகலன் என்க. அமலை   அருவி என மாறுக. அமலை -
      ஆரவாரம். தானை - படை. தன்னிற்   கூட்டப்பட்ட நீரையுடைய சிற்றாறுகளாகிய 
      தானை என்க. வழியிலே   வந்து கூடுஞ் சிற்றாற்று நீர் அதன் ஆற்றலை 
      மிகுவித்தலின் தானை   என்றார். பெருகுபு - பெருகி. |