உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
51 நருமதை கடந்தது
 
           அரிமதர் மழைக்க ணனந்த ரெய்திய
          திருமா மேனியைத் திண்ணிதிற் றழீஇச்
          செல்விசை கதுமெனச் சுருக்கி மெல்லென
    90    வரையே றரிமாப் போல மற்றதன்
          கரையே றினனாற் கார்நீர் கடந்தென்.
 
               (உதயணன்செயல்)

               87 - 91: அரிமதர்..........கடந்தென்

 
(பொழிப்புரை) செவ்வரியோடிய மதர்த்த தனது குளிர்ந்த கண்களிலே துயில் மயக்கம் எய்தப்பெற்ற அழகிய மாமை நிற முடைய வாசவதத்தையைத் திட்பமுறத் தழுவிக்கொண்டு விரைந்து செல்லும் பிடியின் வேகத்தைத் தணித்துக்கொண்டு உதயணகுமரன் மலையின்மிசை யேறாநின்ற அரிமான் போன்று மெல்லக் கரிய நீரை யுடைய அந்நருமதையாற்றை அத்துறையிற் சென்று கடந்து அதன் மறு கரையின் மேலே ஏறினன் என்க.
 
(விளக்கம்) அனந்தர் - துயில் மயக்கம். திருமாமேனி - வாசவ தத்தை அரிமா - சிங்கம். கார்நீர் - கரியநீர்.

51. நருமதை கடந்தது முற்றிற்று.