உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
52. பாலை நிலங் கடந்தது |
|
தோமையு
முழிஞ்சிலு முலவையு
முகாயும்
கடுவுந் தான்றியுங் கொடுமுட்
டொடரியும்
அரவு மரசு மாரு மாத்தியும் 40 இரவு
மிண்டுங் குரவுங்
கோங்கும்
கள்ளியுங் கடம்பு முள்ளியு
முருக்கும்
தணக்கும் பலாசுங் கணைக்கான்
ஞெமையும்
ஈங்கையு மிலவுந் தேங்காய்
நெல்லியும்
வாகையும் பிறவும் வன்மர மொடுங்கித்
45 தோகையுங் குயிலுந் துன்னல் செல்லா
|
|
(மரங்கள்) 37
- 45 : ஓமையும்..........செல்லா
|
|
(பொழிப்புரை) ஓமை மரமும்,
உழிஞ்சின் மரமும், உலவை மரமும், உகாய் மரமும்,
கடு மரமும், தான்றி மரமும், வளைந்த
முள்ளையுடைய விடத்தே தொடரி மரமும், நாகமரமும் அரைய மரமும்
ஆரமரமும் ஆத்திமரமும் இருள்மரமும் இண்டமரமும் சூராமரமும் கோங்க மரமும்
கள்ளிமரமும் கடப்பமரமும் முள்ளி மரமும் முண் முருக்க மரமும்
தணக்கமரமும் பலாசமரமும் திரண்ட அடியினையுடைய
ஞெமைமரமும் ஈங்கைமரமும் இலவமரமும் இனிய காயையுடைய நெல்லிமரமும்
வாகைமரமும் இன்னோரன்ன பிறவுமாகிய வன்மரங்களும் வற்றலாய் ஒடுங்கி
நிற்கப்பெற்று மயிலும் குயிலும் மருவப்படாத என்க.
|
|
(விளக்கம்) மருவப்படாத
பெருவழி (80) என்க. கொடுமுட்டொடரி - வளைந்த முள்ளையுடைய விடத்தே
தொடரி என்னும் மரம். இதனை விடத்துவரை என்பர் இக்காலத்தோர். ஆரும்
ஆத்தியும் என வருதலான் ஆர் என்பதும் ஒருமரம் என்று கொள்க. கொன்றை
எனினுமாம். வன்மரம் என்றது நீர் வறந்த பாலை நிலத்தும் நிலைபெறுதலை
நினைந்து கூறியவாறாம். வளமின்மையால் மயிலும் குயிலும் துன்னல் செல்லா
என்றவாறு.
|