உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
53. பிடி வீழ்ந்தது |
|
தாழிற்
றாழ்ந்து சூழிற் சூழியல்
அந்த ணாளனொடு மந்திரம்
விரும்ப
வஞ்சமி னண்பின் வயந்தக னுரைக்கும்
105 நஞ்சம் பொதிந்து நமக்கும்
பிறர்க்கும்
அஞ்சல் செல்லா வரணகம்
வலித்துக்
காட்டகத் துறையுங் கடுவினை
வாழ்க்கை
வேட்டுவர் பயின்ற விடமற் றிந்நிலம் |
|
(வயந்தகன்
கூற்று)
102 - 108: தாழில்..........இந்நிலம் |
|
(பொழிப்புரை) தான்
துன்புற்றுத் தாழ்ந்துவிடத்தே தானும் துன்புற்றுத் தாழ்ந்தும் தான்
இன்புற்றுத் தழைக்குமிடத்தே தானு மின்புற்றுத் தழைக்கும் நல்லியல்புடைய
பார்ப்பனமகனாகிய அவ்வயந்தகனோடு ஆராய்தலை அவ்வுதயணன் விரும்பி
நிற்றலானே வஞ்சமில்லாத நல்ல நட்பினையுடைய அவ்வயந்தகன் கூறுவான்
:--'காவலனே ! நஞ்சுபோன்ற தீயபண்புகளை நெஞ்சத்தே வைத்து
மறைத்துக்கொண்டு நமக்கும் நம் `போன்ற பிறமன்னர்க்கும் அஞ்சுதல்
வேண்டாத அரண்களின் உள்ளிடத்தே வன்மையுற்று இக்காட்டகத்தே வதிகின்ற
தீவினை வாழ்க்கையையுடைய வேடர்கள் மிகவும் பயிலா நின்ற இடமாகும் இந்த
இடம் என்க. |
|
(விளக்கம்) தாழ்தல் -
துன்புற்றுத்தாழ்தல். சூழ்தல் - இன்பத்தாற் கிளர்ச்சியுறுதல் என்க.
அந்தணாளன் : வயந்தகன். மந்திரம் - சூழ்ச்சி. நஞ்சம் - நஞ்சனைய
தீமைகள். கடுவினை - தீவினை. |