| உரை | 
|  | 
| 1. உஞ்சைக்காண்டம் | 
|  | 
| 53. பிடி வீழ்ந்தது | 
|  | 
| 125    பொற்றார் வேந்தன் 
      பூங்கொடிப் 
      பாவையைச்
 செவ்விதிற் 
      றேர்ந்து கைவிரல் 
      கூப்பித்
 தோழி 
      காஞ்சனை தோன்றக் கூறிக்
 | 
|  | 
| (காஞ்சனை 
      செயல்) 125 - 127: பொற்றார்...........கூறி
 | 
|  | 
| (பொழிப்புரை)  பொன் 
      மாலையணிந்த பிரச்சோதன மன்னனுடைய செல்வியாகிய பூங்கொடிபோலும் 
      வாசவதத்தையைத் தோழியாகிய
 காஞ்சன மாலை செவ்விதாக ஆராய்ந்து 
      துயிலெழுப்பித் தனது
 கைவிரல்களைக் கூப்பி வணங்கி விளக்கமாகக் கூறாநிற்ப 
      என்க.
 | 
|  | 
| (விளக்கம்)  அவனுரைத்த 
      மாற்றத்தை (124) பாவையைத் தேர்ந்து காஞ்சனை கை கூப்பிக் கூற என்க. 
      வேந்தன் : பிரச்சோதனன்.
 பாவை : வாசவதத்தை. துயிலெழுப்பித்தேர்ந்து 
      என்க. தேர்தலாவது
 துயில் மயக்கந்தீர்ந்து செவ்வியளாதலை அறிதலென்க, 
      கூறி - கூற
 என்க.
 |