உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
53. பிடி வீழ்ந்தது |
|
காழில்
பஞ்சி யூழறிந் தாற்றி
விரற்கொண் டமைத்து வித்தக ரூட்டிய
130 அரத்த வடர்மையு மரந்தோய்த்
தென்ன நோய்கொண்டு
கறுக்கு மாய்மலர்ச் சேவடி
ஏழடி யிடுத லாற்றா
தாயினும்
ஊர்திரைப் பௌவ முலாவு
மூக்கமொடு
பூமலர்க் கோதையும் பொறையென வசைவோள்
135 மாமலை தாங்கு மதுகையள்
போல
இன்பக் காதலற் கேத
மஞ்சிப்
பொன்புனை பாவையும் போகுதல் வலிப்பக் |
|
(வாசவதத்தைநிலை)
128 - 137: காழில்........வலிப்ப |
|
(பொழிப்புரை) விதையில்லாத பஞ்சினை முறைமையறிந்து கை செய்து விரலிலே கொண்டு
சீர்செய்து மையூட்டுதலிலே வித்தகமுடைய வண்ண மகளிர் ஊட்டிய சிவந்த
நொய்தான அலத்தகக் குழம்புதானும் பட்ட துணையானே அரந்தோய்ந்தாற் போன்று
துன்புற்றுக் கன்றுகின்ற அழகிய மலர்போன்ற தனது சிவந்த அடிகள் தொடர்ந்து
ஏழடி யிட்டு நடக்கவியலாதனவாயினும், காஞ்சனமாலை கூறிய செய்தி கேட்டவுடன்
அவ்வாசவதத்தை நல்லாள் ஊராநின்ற அலைகளையுடைய கடற்பரப்பினை
யெல்லாம் உலாவிவருபவள் போன்ற ஊக்கத்தோடு எழுந்து தன் இன்பத்திற்
கேதுவான தன் காதலனுக்கு எய்தும் துயரத்திற்கே அஞ்சுபவளாய்த் தன்
துயர்காணாளாய்ப் பொன்னால் ஒப்பனை செய்யப்பட்ட கொல்லிப்பாவை
போல்வாளாகிய அவள் மலர்ந்த பூவானியன்ற மாலையும் சுமை என்று இளைப்பவள்
அப்பொழுது பெரிய மலையினைச் சுமக்கும் பேராற்றல் உடையாள் போன்று
அவ்வாறு நடத்தலைத்துணியா நிற்ப என்க. |
|
(விளக்கம்) காழ் - விதை.
ஊழ் - முறை. ஆற்றி - கைசெய்து, வித்தகர் - ஒப்பனைவித்தகமுடைய மகளிர்.
அரத்தம் - சிவந்த அடர்மை. நொய்தான குழம்பு. அரம் - இரும்பை அராவு மொரு
வன்கருவி. கறுத்தல் - கன்றுதல். ஏழடியென்றது சிறிதுதூரம் என்றவாறு.
'ஒன்பதின்காண் நடப்பினும் ஒருகாத மென்றஞ்சும்' என்றார்
சிந்தாமணியினும் (179. ஊக்கம் - மனக்கிளர்ச்சி, இன்பக்காதலற்கு
ஏதமஞ்சி என்றதனால் தனக்குறு மேதம் மறந்து என்பது பெற்றாம். இதனோடு
'கடுங்கதிர் வெம்மையிற் காதலன் றனக்கு, நடுங்குதுய ரெய்தி நாப்புலர
வாடித், தன்றுயர் காணாத் தகைசால் பூங்கொடி' எனவரும் சிலப்பதிகாரம்
(15-139-41) நினையற்பாலது. மதுகை - வலி. ஏதம் துன்பம். |