உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
53. பிடி வீழ்ந்தது
 
            மணங்கமழ் நறுந்தார் மன்ன குமரன்
     170    வயந்தகற் குரைக்கும் வாலிழை வருந்தினள்
           இயங்குதல் செல்லா திருக்குமிடங் காணெனக்
 
                  (உதயணன் கூற்று)
             169 - 171: மணம்............காணென
 
(பொழிப்புரை) வாசவதத்தையின் வழிநடை வருத்தங்கண்ட
  மணங்கமழா நின்ற நறிய மலர் மாலையினையுடைய வேந்தன்
  மகனாகிய உதயணகுமரன் வயந்தகனை நோக்கிக் கூறுவான் 'நண்ப !
  தூய அணிகலன்களையுடைய வாசவதத்தை பெரிதும் வருந்தினள்;
  இனி நடத்தல் கூடாது; ஆதலின் அண்மையிலேயே யாம் தங்கியிருத்தற்
  கேற்றதோரிடத்தைக் காண்பாயாக!' என்று கூற என்க.
 
(விளக்கம்) மன்ன குமரன் : உதயணன். வாலிழை ; வாசவதத்தை .
  இயங்குதல் செல்லாது - இயங்குதல் கூடாது. இருக்குமிடம் - கரந்துறைதற்
  கேற்றவிடம்.