உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
54. வயந்தகன் அகன்றது |
|
தாங்க
லாற்றா டளர்தலு
மாங்கே உலைவில்
பெரும்புகழ் யூகி யொட்டார் 65
நிலவரை நிமிர்வுறு நீதி
நிறீஇக் கூற்றுறழ்
மொய்ம்பி னேற்றுப்பெய
ரண்ணல் பரந்த
படையொ டிருந்தனி
துறையும் புகலரும்
புரிசைப் பொருவில்
புட்பகம் இருளிடை
யெய்திப் பொருபடை தொகுத்துக் 70 காலை
வருவேன் காவ
லோம்பிப் போகல்
செல்லாது புரவல
விருவென உள்ளத்
துள்பொரு ளுணர்ந்தோன்
போல வள்ளிதழ்
நறுந்தார் வயந்தக
னுரைத்த மாற்றங்
கேட்டே மன்னவன் மனமுவந்
|
|
(இதுவுமது) 63 - 74 :
ஆங்கே.........மனமுவந்து
|
|
(பொழிப்புரை) '''''இனியான் நமது
நாட்டின்கண் கேடில்லாத பெரிய புகழையுடைய நம் யூகியின் ஏவலாலே நம்
பகைவர் நாட்டெல்லையிலே ஓங்காநின்ற அரச நீதியை நிலைநிறுத்திக்
கூற்றுவனை ஒத்த ஆற்றலுடைய இடபகன் என்னுந் தலைவன் பரவிய
பெரும் படையோடு இருந்து இனிதாக வதியாநின்ற பகைவர் உட்புகுதற்கியலாத
மதிலையுடைய ஒப்பற்ற 'புட்பகம்' என்னும் நகரத்தை இந்த இரவிலேயே
எய்திப் போர்ப்படைகளைக் கூட்டிக் கொண்டு விடியலிலேயே மீண்டு இங்கே
வருகுவேன்! வேந்தே! யான் வருமளவும் நீ இம்மாதரைப் பாதுகாத்து ஓம்பிப்
புறம் போகாமல் இருந்தருள்க!' என்று கூறாநிற்ப; உதயணன் தன்
நெஞ்சின்கண் நிகழா நின்ற எண்ணத்தை அறிந்தவன் போன்று பெரிய
இதழையுடைய நறிய மலர் மாலையை அணிந்த வயந்தகன் கூறிய மொழிகளைக் கேட்டு
'நன்று நன்' றென உள்ள மகிழ்ந்து என்க.
|
|
(விளக்கம்) ஆங்கே - நம் நாட்டின்கண்.
யூகியின் ஏவலாலே என வருவித் தோதுக. ஒட்டார் நிலவரை - பகைவர்
நாட்டெல்லை நிறீஇ - நிலைநிறுத்தி ஏற்றுப் பெயர் அண்ணல் என்றது
இடபகனை; இவன் உதயணன் அமைச்சர்களில் ஒருவன் ; உதயணன்
பணியால் வத்தவ நாட்டெல்லையிலுள்ள புட்பக நகரத்திருந்து அப்பகுதியை
ஆட்சி செலுத்துபவன். யூகி உதயணன் சிறை மீளுங்காறும் விழிப்புடன்
எல்லையைப் பாதுகாத்திடுக! என்று பணித்தபடி அந்நகரத்திருக்கின்றனன்
என்றான் என்க. புட்பகம் - வத்தவ நாட்டில் ஒரு நகரம். புரவல் - அரசனே;
விளி, வயந்தகன் கூறுமுன்னரே உதயணன் வயந்தகனை இடபகன்பால் போக்கக்
கருதினன் ஆகலின் உள்ளத் துறு பொருள் உணர்ந்தோன் போல் வயந்தகன்
உரைத்த மாற்றம் என்றார். மன்னவன் - உதயணன்.
|