உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
54. வயந்தகன் அகன்றது |
|
யானை வாரியஞ்
சேனை வீடும்
அடுத்தனையாராய்ந் தறிய
வென்வயின்
நெடித்தல் செல்லாய் விடுத்த னீயென 90
விடுத்தனன் விடுத்து வேந்த
னிருந்த அந்தக்
கோட்டியுண் மந்திர
மாகப் பெரும்பொரு
ளிதுவெனப் பொருந்தக்
கூறி அரும்பெறல்
யூகியு முருமண்
ணுவாவும் வயந்தகன்
வரினு நயந்தனன் றெரியா 95 திருக்க
தானென நெறிப்படக் கூறிக்
|
|
(இதுவுமது)
87 - 95 : யானை..........கூறி
|
|
(பொழிப்புரை) பின்னர், நீ
சென்று யானை வாரிகளையும் படை வீடுகளையும் ஆராய்ந்தறிய வேண்டுமாகலின்
என்பால் நெடும் பொழுது தங்காதே கொள்! விரைந்து செல்க ! என்று
அவனைச் செல்ல விட்டேனாக, மற்றொரு நாள் அரசனிருந்து மறை
பேசுதற்குறிய மறை மன்றத்திலே அவன்பாற் றனித்து நமக்கு
இன்றியமையாப் பெரிய காரிய மிதுவென்றொரு காரியத்தையும் அவன்
நெஞ்சத்தே பதியும்படி கூறிப்பின்னரும், நின்னகரத்தே நின்பால் நம்
அரும்பெறல் அமைச்சராகிய யூகியும் உருமண்ணுவாவும் வயந்தகனும்
வந்தாராயினும், நீ இம்மறைச் செய்தியைத் தெரியாதவன் போலவே
அவரை விரும்பு மாத்திரையே இருப்பாயாக, என்று யான் முறைப்பட
|
|
(விளக்கம்) யானை வாரி - யானைகள்
அகப்படுத்திய இடம். சேனை வீடு - படைஞர் உறையுமிடம் .நெடித்தல் செல்லாய்
: ஒரு சொல் : தங்காதே என்றவாறு. விடுத்தல் - விடுக; செல்க.
வேந்தனிருந்த அந்தக் கோட்டி என்றது, அரசன் தலைவனாக விருந்து மறை பேசும்
கூட்டம் கூடும் இடத்தை. யூகி முதலியோர் வரினும் என்றது யாவர் வரினும்
என்றவாறு. இம்மறைச் செய்தி தெரியாதவன் போன்றிரு என்றவாறு.
|