உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
55. சவரர் புளிஞர் வளைந்தது |
|
வருபடைக் ககன்ற வயந்தகன்
வருவழிப் பொருபடை
யண்ணல் பொழில்வயி
னிருப்பக்
கடுவிசைக் கனலி சுடுகதிர் மருங்கிற் 20
குடுமி நெற்றிக் கூருளி
யன்ன வல்வாய்
வயவன் வறண்மரத்
துச்சிப் பல்காற்
குரைத்தது பகற்படை
தருமெனப் பாட்டிற்
கூறக் கேட்டன னாகி
|
|
(இதுவுமது)
17 - 23:
வருபடை.......கேட்டனனாகி
|
|
(பொழிப்புரை) தமக்கு
வழித்துணையாக வருதற்கியன்ற படை கூட்டி வருதற்பொருட்டுச் சென்ற வயந்தகன்
மீண்டு வருதற் குரிய வழியிலமைந்ததொரு பொழிலிலே போர்ப் படையுடைய
உதயண குமரன் அமர்ந்திருக்கும்பொழுது கடிதாகச் சுடாநின்ற
சினத்தையுடைய ஞாயிற்று மண்டிலம் தோன்றா நின்ற கீழைத் திசையிலே
கொண்டையினையுடைய நெற்றியையும் கூரிய உளி போன்ற வலிய அலகினையும் உடைய
வயவன் என்னும் பறவை யொன்று வற்றியதொரு மரத்துச்சியிலிருந்து பலகாலும்
ஒலித்தது; ''இப்பகல் பகைப்படையை நின்பாற் கொணரும்'' என்று தனது
ஒலி யாகிய நிமித்தத்தாலே எடுத்துக் கூறாநிற்றலைக் கேட்டவனாய்
என்க.
|
|
(விளக்கம்) வருபடை - துணையாக வரும் இடபகனுடைய படை. விசை
ஈண்டு மிகவும் வெதுப்புவதனைக் குறிக்கும். கனலி - ஞாயிறு. கதிர்
தோன்றும் மருங்கில், கீழ்த் திசையில் என்க. குடுமி - கொண்டை. வாய் -
அலகு. வயவன் - மரங்கொத்திப் பறவை. இதனைக் 'குடுமி'' நெற்றிக்
கூருளியன்ன வல்வாய் வயவன்' என்று கூறும் எழுத்தோவியம் கண்டின்புறுக.
வறண்மரம் : வினைத் தொகை, குரைத்தது : பெயர.் பகற் படைதரும் - எழுவாய்த்
தொடர். வயவன் குரைத்தது தன் பாட்டில் இப்பகல் படைதரும் என்று கூற
என்க. பாட்டு - நிமித்தத்திற்கு ஆகுபெயர்.
|