உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
55. சவரர் புளிஞர் வளைந்தது |
|
காடுதேர் முயற்சியர் கைப்பட்
டோர்களைப் பாடற்
பாணிப் பல்லிசை
கேட்டும் ஆடென
வணங்கிற் கருந்தலை
துமித்தும் வீளை
யோட்டின் வெருவ வெய்தவர் 65 ஊளைப்
பூசலோ டாடல்கண்
டுவந்தும்
காட்டுயிர் காணார் கைப்பயில்
குறியொடு வேட்டன
செய்யும் வேட்டுவினைக்
கடுந்தொழிற்
கவர்கணை வாழ்க்கைச் சவரர் புளிஞர்
|
|
(இதுவுமது)
61 - 68:
காடு.......புளிஞர்
|
|
(பொழிப்புரை) எப்பொழுதும் தம் முணவின் பொருட்டு்க் காட்டினூடே
விலங்கையும் பறவையையும் ஆறு செல்வோரையும் ஆராய்கின்ற
முயற்சியையுடையோரும், அங் கனம் ஆராயுங்காற்ஙறம் மாற் கைப்பற்றப்பட்ட
வழிப்போக்கரைப் பாடுவித்து அவர் தம் பாட்டுந் தாளமுமாகிய பல்வேறு
இசைகளைக் கேட்டுப் பின்னரும் அவரை யெல்லாம் ஆடுகளாகக் கருதித் தம்
வழிபடு தெய்வமாகிய கொற்ற வைக்கு முன்பு அவருடைய அரிய தலைகளைத் துணித்துப்
பலியிட்டும் சீழ்க்கை யடித்து ஓசையைச் செலுத்தலோடு வழிப்போக்கர்
அஞ்சும்படி அம்புகளை அவர் உடலில் எய்து அவர் எடுக்கும் ஊளைபோன்ற
அழுகையையும், அவர் துடித்து ஆடும் ஆடலையும், கண்டு பெரிதும்
மகிழ்ந்தும், சான்றோர் காட்டாநின்ற உயிர் இயல்பு ஒரு சிறிதும் காண
மாட்டாதோரும், தமது குல வொழுக்கமாகப் பயின்று வருகின்ற குறிக் கோளோடு
நன்றுந் தீதும் நாடாது தாம்விரும்புவனவற்றையெல்லாம் செய் தொழுகும்
வேட்டம் என்னும் கொடிய தொழிலையும் அதற்குக் கருவியாகிய உயிர்
கவரும் கணை முதலிய படைக்கலங்களையே கைக்கொண்டு அவற்றாலே
வாழ்கின்றவருமாகிய சவரரும் புளிஞரும் எனப்படும் இரு வகைப்பட்ட வேடர்கள்
என்க.
|
|
(விளக்கம்) கைப்படுவோர் - அப்பாலை நிலத்தே ஆறு
செல்வோர் - பாடுவித்து அவர் தம் பாடற் பாணி இசைகேட்டும் என்க. அணங்கு
- கொற்றவை. மக்கட்டலை யாதலின் அருந்தலை யென்றார் ஆசிரியர். வீளை -
சீழ்க்கை. ஊளை - நரி முதலியவற்றின் கூக்குரல். ஈண்டு எய்யப் பட்டோர்
அழுகைக்கு உவமவாகு பெயராயிற் றென்க. ஆடல் துடித்தாடும் ஆட்டம்.
காட்டுயிர் மெய்க்காட்சியாளரான் அளவைகளாற் காட்டப்படும் உயிர்.
கைப்பயில் குறி என்றது வழி வழி யாக ஒழுகிப் பயின்று வருகின்ற குறிக்கோள்
என்றவாறு. அவையாவன, தின்பதும் புணர்வதுமாம். சவரர், புளிஞர் என்பன
வேட்டுவ வகை.
|