உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
56. வென்றி யெய்தியது |
|
170 வருகென
நின்றோன் வயந்தகற்
கண்டே
உயிர்த்துணைத் தோழ னுளனென
வுவந்து
பெயர்ச்சியி லுலகம் பெற்றான்
போலச்
செந்தா மரைக்கட் காவலன்
செவ்வியை
முந்துறக் கேட்ட பின்றை மற்றவன்
175 வந்ததை யுணர்குநன் மந்திர மிருந்துழிச்
|
|
(இதுவுமது)
170 - 175:
வயந்தகன்.........இருந்துழி
|
|
(பொழிப்புரை) வயந்தகன்
வரவினைக்கண்டு தன் உயிர்க்கு ஓங்கொரு துணைவனாகிய உதயணமன்னனும்
உயிருடன் உளன் என்றுணர்ந்து மீள்தலில்லாத வீட்டுலகத்தை
எய்தியவன் போன்று துயரஞ் சிறிது மில்லாதவனாய்ப் பெரிதும் மகிழ்ந்து
முன்னர்ச் செந்தாமரை மலர்போன்ற கண்களையுடைய உதயணன் நிலைமையினை நன்கு
கேட்டுணர்ந்து கொண்டு, பின்னர் அவ்வயந்தகன் தன்பால் வந்தமைக்குக்
காரணமான செய்தியை உணர்தற்கு இருவரும் தமியராய் ஆராய்ச்சி மன்றத்தே
இருந்து அளவளாவும் பொழுது என்க.
|
|
(விளக்கம்) உதயணன்
இறப்பின் வயந்தகனும் ஒருதலையாக இறப்பன். ஈண்டு வயந்தகனை யான்
காண்பதனால் அவனும் உயிருடன் இருக்கின்றான் எனக் கருதலளவையான்
உணர்ந்தனன் என்பது கருத்து. தோழன் : உதயணன். பெயர்ச்சியிலுலகம் -
வீட்டுலகம். காவலன் : உதயணன் செவ்வி - நிலைமை. அவன் : வயந்தகன்.
வந்ததை-வந்தமைக்குரிய காரணத
|