உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
56. வென்றி யெய்தியது |
|
வாட்டொழில் வயந்தகன் காட்டக
மருங்கின் 205 அண்ண லிருந்த வறிகுறித்
தானம் நண்ண
லுற்ற காலை
மன்னவன்
அம்புபட வீழ்ந்த வெங்கண்
மறவர்
உதிரப் பரப்பி னுருவுகெட
உண்ட
காக்கையுங் கழுகுந் தூப்பதந் துறந்து
210 கோடுகொண் டிருந்த குழாஅ
நோக்கிக்
காடுகொண் மள்ளர் கதுமென
நடுங்கிப்
போர்க்கள முண்மை பொய்த்த
லின்றென
நீர்க்கரைப் பொய்கை நெற்றிமு
னிவந்த
முள்ளரை யிலவ மொள்ளெரி சூழப்
215 பொங்குபுகை கழுமிய பூம்பொழிற்
படாஅன்
இங்குநம் மிறைவ னிருந்த
விடமவன்
ஏதம் பட்டன னாதலி
னின்னே
சாதல் பொருளெனக் காதல்
கழுமி வருபடை
யுய்த்த வயந்தகன் மாழ்கப்
|
|
(வயந்தகன்
உதயணனைக் காணாமல்
வருந்தல்)
204 - 219: வாட்டொழில்..........இன்றென
|
|
(பொழிப்புரை) இடபகன் முதலியோருடன்,
வாட்போர் வல்லுநனாகிய வயந்தக குமரன், உதயண குமரன் காட்டன்கண்
தங்கியிருந்த அடையாளமுடைய இடத்தை எய்திய காலத்தே
அவ்விடத்தே உதயணன் எய்த கணைகள் பாய்ந்தமையானே இறந்து வீழ்ந்த
வெவ்விய நோக்குடைய வேடர் குருதியா னனைந்த அப்போர்களத்தே
அப்பிணங்களின் உருக்குலையும்படி குடைந்து ஊனைத் தின்ற காக்கைகளும்
கழுகுகளும் அவ்வூனுணவினை வெறுத்துவிட்டு மரக்கிளைகளிலே குழாங்
கொண்டிருந்தவற்றை நோக்கி ஞெரேலென நடுங்கி இவ்விடத்தே நம் பெருமானோடு
இக்காட்டில் வாழும் வேடர் போரிட்ட போர்க்களமே இது, இஃதுண்மையே
பொய்யன்று; என்று நினைத்து, நீர்நிரம்பிய பொய்கைக்கரையுச்சியினின்
றுயர்ந்த முள்ளையுடைய அடிப்பகுதியையுடைய இலவம் பொழில்தானும் ஒள்ளிய
தீயாற் சூழப்பட்டு மிக்க புகை நிரம்பியிருத்தலான் அப்பொழிலிடத்தும்
புகமாட்டானாகி இவ்விடமே நம் பெருமான் உறைந்த விடமாகும்;
அவன் இறந்தொழிந்தான் ஆதலாலே யானும் இப்பொழுதே இறந்தொழிதலே
செய்தற்குரிய செயலாகும், என்று அம்மன்னன்பால் அன்பு நிறைந்து துணைவரும்
படையைக் கொணர்ந்து விட்ட அவ்வயந்தக குமரன் கையறு நிலை யெய்தி
மயங்காநிற்ப என்க.
|
|
(விளக்கம்) அண்ணல்
: உதயணன் அறிகுறித்தானம் - முன்னர் உதயணனாலே குறித்துக் காட்டப்பட்ட
அடையாளமான இடம். "எவ்வந்தீர இருள்கழி காலைக் கோற்குறி எல்லையுட்
குறிவழி வம்மென" உதயணன் முன்பு கூறினமையும் (54-128-9) நினைக.
மன்னவன் : உதயணன். தூப்பதம் - ஊன் உணவு. கோடு -
மரக்கிளை. நோக்கிக் கதுமென நடுங்கி என மாறுக. கதுமென : விரைவுக்
குறிப்பு. இது உதயணனோடு மள்ளர் போரிட்ட போர்க்களம்; இஃதுண்மையே
என்க. நெற்றி - உச்சி. இங்கு - இவ்விடம்; இறைவனிருந்த இடம் என்க.
இறந்தான் எனத் தன் மனத்தி னினைத்தலும் பொறாது ஏதம்பட்டனன் என
நினைத்தான்.
|