உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
56. வென்றி யெய்தியது |
|
220
பொருபடை யாளர் புல்லிடைத்
தெரிவோர்
வேட்டுவ ராதல் வல்லிற்
காட்டி
வாட்டொழில் வயந்தகன் வருத்த
மோம்பிப்
பெருங்கணஞ் சென்ற பிறங்குபுற்
கானம்
பரந்தனர் செல்வோர் பாவையைத் தழீஇக்
|
|
(படையாளர்
அவனைத் தேற்றல்) 220 -
224: பொருபடை..........செல்வோர்
|
|
(பொழிப்புரை) இவ்வாறு மயங்கிய
வயந்தகன் நிலைகண்டு உடன் வந்த படைத்தலைவர்கள் ஆண்டு புற்றரையிலே
இறந்து கிடப்போரனைவரும் வேடரே யாதலைத் தம் வில்லாலே
வயந்தகனுக்குச் சுட்டிக் காட்டி "நம் பெருமானுக்கு ஏதம் இல்லைக் காண் !"
என்று வாள் வல்லுநனாகிய அவ்வயந்தகன் துயரத்தை ஓரளவு தணித்துப் பெருங்
கூட்டமாகச் சென்ற அப்படைமறவரெல்லாம் விளங்கா நின்ற ஊகம்
புல்லையுடைய அக்காட்டிலே பல முகமாகப் பரவிச் செல்பவர்
என்க.
|
|
(விளக்கம்) படையாளர் : எழுவாய். புல்லிடைத் தெரிவோர் என்றது, புற்றரையிலே
இறந்தவராய்க் காணப்படுவோர் என்றவாறு. வில்லாலே சுட்டுக்காட்டி என்க.
அனைவரும், வேட்டுவரேயாகலின் நம் பெருமான் ஏதம் பட்டிலன் என்று கூறி
வருத்தம் ஓம்பி என்க. பெருங் கணமாகக் கூடிச்சென்ற படைஞர்
பின்னர்ப் பரவிச்செல்வோர் என்க. பிறங்கு - விளங்கும், புல் - ஈண்டு
ஊகம் புல். - இப்புல் வெயிலால் ஒளிரும் என்க. புல் - மூங்கில் எனினுமாம்.
இதற்கு உயர்ந்த மூங்கில் என்க.னத்தான்.
|