உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
56. வென்றி யெய்தியது |
|
பரந்தனர் செல்வோர் பாவையைத்
தழீஇக் 225 காவி கவினிய
தாவில்
பொய்கையுள்
தனித்தா ணிவந்த தாமரை
போலப்
பனித்தார் மார்ப னிற்ப
மொய்த்துடன்
வளைத்தனர் வலக்கும் வயவரைக்
கண்டே
உளைப்பொலி மாவும் வேழமு மூர்ந்தவர்
230 போஒந் திசைவயிற் புதைந்தனர் நிற்பக்
|
|
(படையாவர்
உதயணனைக்கண்டு வேடர்களைச்
சூழ்தல்)
224 - 230: பாவையை..........நிற்ப
|
|
(பொழிப்புரை) ஆங்கோரிடத்தே
கருங்குவளை மலர்களாலே அழகுற்ற குற்றமற்ற ஒரு பொய்கையிலே தனது
தண்டுயர்ந்து தனித்துத் தோன்றா நின்றதொரு செந்தாமரைப் பூப்போலே
குளிர்ந்த மலர் மாலையையுடைய மார்பையுடைய உதயணகுமரன்
கொல்லிப் பாவைபோன்ற வாசவதத்தையைத் தழுவிக் கொண்டு நிற்ப, அவர்களை
மிகவும் நெருங்கிச் சூழா நின்ற வேடர்களைக் கண்டு பிடரி மயிராலே
பொலிவுறாநின்ற குதிரைகளையும் யானைகளையும் செலுத்தி அவ்வேடர் செல்லும்
திசையிலே சென்று அவர் அறியாமல் மறைந்து நிற்க என்க.
|
|
(விளக்கம்) பாவை:
வாசவதத்தை. காவி-கருங்குவளை. உதயணனையே நோக்கிய வாசவதத்தை காஞ்சனை
யாகிய இருமகளிர் கண்களுக்கும் காவிமலர் உவமை என்க. சூழ்ந்து
நிற்கும் வேடர்கள் கரையாகவும், அவர் நடுவண் உதயணனையே நோக்கி நிற்கும்
மடவார் கண்கள் கருங்குவளை மலராகவும், அவரிடையே உயர்ந்து
திகழும் உதயணன் முகம் ஒருதனித் தாமரை மலருமாக உவமித்த அழகுணர்ந்து
இன்புறுக. எல்லாரினும் உயர்ந்து தோன்றுதலாலே தாளுயர்ந்த தனித் தாமரை
மலர் என்றார். வளைத்துச் சூழும் வயவர் என்க. உளை - பிடரிமயிர்.
அவர் - அவ்வேடர். புதைந்தனர் - மறைந்தவராய்.
|