உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
56. வென்றி யெய்தியது |
|
கதிரகத் திருந்த முதிர்குரற்
பறவை
போமின் வல்லே போதீ
ராயினும்
உயிர்த்தவ லுரைக்கு மென்மதை
யுணர்ந்து
முந்தயுள் ளுரைத்த முதுமகன் கூற
|
|
(நிமித்திகன்
வேடர்க்குக்
கூறுதல்)
231 - 234: கதிரக..........கூற
|
|
(பொழிப்புரை) அப்பொழுது கிழக்குத்
திக்கி லொரு மரக் கிளையிலிருந்த முதிர்ந்த குரலையுடைய பறவை
யொன்று ஒலிக்க முன்னர் அவ்வேடர்க்கு நிமித்தங்கூறிய அந்த முதுவேடனே
அப்பறவை யொலி கேட்டு இவ்வொலி "வேட்டுவீர்! விரைந்து ஓடிப்
போங்கோள் அங்ஙனம் போகாவிடின் உங்கள் உயிர்போம்"
என்பதனை உணர்த்தும் என்று உணர்ந்துகொண்டு இந்நிமித்தத்தை
அவ்வேடர்க்குக் கூறுதலானே என்க.
|
|
(விளக்கம்) கதிரகம் - ஞாயிறு தோன்று மிடமாகிய திசை. வல்லே - விரைந்து.
உயிர்த்தவல் - உயிர்க்குக் கேடு.
|