உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
56. வென்றி யெய்தியது |
|
பைங்கண் வேழத்துப் படைத்திறல்
வேந்தன்
தமர்வழங்கு படையு மவர்வழங்கு
வாளியும்
பொன்னிழை மாதரொடு தன்வயிற் காத்து
270 மரம்பயி லழுவத்து மறைந்தன
னிற்ப
உரங்கெழு மறவ ருதயண
னொழிய
மத்துறு கடலிற் றத்தறு நெஞ்சினர்
|
|
(உதயணன்
செயல்) 267 - 272:
பைங்கண்............நெஞ்சினர்
|
|
(பொழிப்புரை) பசிய கண்ணையுடைய
யானையையுடைய படை ஆற்றன்மிக்க வேந்தனாகிய உதயணன் தன் சுற்றத்தாராகிய
இடபகன் மறவர் விடுகின்ற படைக்கலங்களும் அவ்வேடர்
விடுகின்ற கணைகளும் பொன்னணிகலன் அணிந்த மகளிர் இருவர் மேலும் தன்
மேலும் படாமற் பாதுகாத்தற் பொருட்டு மரங்கள் செறிந்ததோர் பரப்பில்
மறைந்து நிற்ப, ஏனைய வேடர் அவ்வுதயணனை விட்டு விட்டு மலையாகிய மத்தாற்
கலக்குண்ட பாற் கடல்போன்று கலங்கா நின்ற நெஞ்சினையுடையராய்
என்க.
|
|
(விளக்கம்) வேந்தன்: உதயணன்: தமர்: இடபகன் முதலியோர். மாதர்: வாசவதத்தையும்
தோழியும். அழுவம் - பரப்பு. உரம் வலிமை. மத்து - மலையாகிய
மத்தென்க. கடல் - பாற்கடல்.
|