(விளக்கம்) அரசற்குரியன
என்று நூல்கள் கூறும் முறைமையினாலே என்க. இவற்றை,
"படையுங் கொடியும்
குடையும்
முரசும் நடைநவில்
புரவியும் களிறுந்
தேரும் தாரும்
முடியும் நேர்வன
பிறவும்
தெரிவுகொள் செங்கோல் அரசர்க் குரிய"
எனவரும் தொல்காப்பியத்தினுங் (மரபியல் - 72.) காண்க. ஒளிப் படலம் -
ஒளிக்கற்றை. வள்ளி - கொடி. முகடு - உச்சி. துளங்கு கதிர்
நித்திலத்தரளக் கோவை என மாறுக. நித்திலத்தரளம்-நித்தில மாகிய தரளம்
என்க. படவம் - ஓரிசைக்கருவி. விதானம்-மேற்கட்டி. பேழ்-பெருமை.
வள்ளிப் போர்வை - பூங்கொடி ஓவியம் பொறித்த
போர்வை.
|