உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
57. படை வீடு |
|
100 மணிமா ராட்டத்
தணிபெற
வழுத்திக்
காவலன் மகளைக் கைதொழு
தேத்தி
ஆய்பத வடிசின் மேயதை
யூட்டி
அவிழ்மலர்ப் படலைத் தந்தை
யகவயின்
நிகழ்வதை நிகழ்த்திப் புகழ்வரும் பொலிவொடு
105 பரிசனஞ் சூழ்ந்து பரிவுநன்
கோம்ப
அன்றை யப்பக லசைஇ
யொன்றிய
துன்பப் பெருங்கட னீந்தி
யின்பத்
தேம நெடுங்கரை யெய்தி யாமத்து
|
|
(இதுவுமது)
100 - 108 : மணி..........கரையெய்தி
|
|
(பொழிப்புரை) மணிகள்
மிக்க மகாராட்டிர நாட்டு ஒப்பனைகளைச் செய்து
வாழ்த்துக்கூறி வேந்தன் மகளாகிய அவ்வாசவதத்தையை
அவ்வண்ணமகளிர் கைகூப்பி வணங்கிய பின்னர்,
உணவூட்டும் மகளிர் நுண்ணிய அரிசியாலாய
அறுசுவையடிசிலுள் வைத்து அவள் விரும்பியதனை அன்போடு
ஊட்டிப் பின்னர் இதழ் அவிழ்ந்த மலருந்தளிரும் விரவிய மாலை
முதலிய பொருள்களாலே செய்யும் ஒப்பனைகளை அவள் தந்தையின் அரண்மனையின்
கண் அவட்கு வண்ணமகளிர் செய்வனவெல்லாம்
செய்தமையாலே புகழ்தற்கரிய பேரழகோடு தோன்றாநிற்ப மாதர்கள்
அவளைச் சூழ்ந்து அவள் பிடிமிசை இருளிலே ஊர்ந்து வந்தமையானும்,
பல்பொழுதுண்ணாமையானும் எய்திய துன்பத்தை அகற்றி நன்கு
பேணாநிற்ப, அற்றைநாள் அந்தப் பகற்பொழுதிலே தங்கித்
தன்னோ டொன்றிய துன்பப் பெருங்கடலை நீந்தி இன்பமாகிய
பாதுகாவலமைந்த நெடிய கரையினை அடைந்தமையாலே என்க.
|
|
(விளக்கம்) மராட்டம்
- மகாராட்டிரம் என்னும் நாடு அணி - ஒப்பனை. காவலன் - பிரச்சோதனன்.
மேயதை - விரும்பியதனை. தந்தையகவயின் - தந்தை மனையில். பரிவு
வழிவரல் வருத்தம் உண்ணா வருத்தம் முதலியன என்க. துன்பப் பெருங்கடல்
என்றது கழிந்த இரவினிகழ்ந்த துன்பங்களை. ஏமம் -
பாதுகாவல்.
|