(பொழிப்புரை) யாழறி
வித்தகனாகிய அவ்வுதயணனுடைய மறமிக்க படைவீடானது அவ்வழியிலே உயர்ந்த
மரத்தடிகள் தோறும் வெள்ளிய பாற்கடலின் குளிர்ந்த அலைகள் போன்று
நிரல்நிரலாகத் தறிகளிலே கட்டிய நூலானியன்ற படாங்களாலே இயற்றப்பட்ட
வெண்மாடங்களிலே செறிந்த மாந்தர்களையுடைய தாய், எந்தப்
பக்கங்களினும் மதயானைகள் முழுங்காநின்று அந்தப் பெரிய நகர் மேலும்
கட்டவிழ்ந்த மலர்மாலையணிந்த மன்னனையும் பெற்று இராப் பொழுதிலே
(உரோகிணியோடு) நிறைதிங்களைப் பெற்ற வானகம் போன்றும்,
உத்தரகுருவைப் போன்றும், ஒளியும் இன்பமும்
உடையதாயிற்று; என்க.