உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
58. சயந்தி புக்கது |
|
உழைப்படை யாப்பிற் புடைப்படை காப்ப
95 மிலைச்ச மன்னர் தலைப்படை
யொட்ட
நற்படைத் தோழர் விற்படை
பின்வரக்
கடல்கிளர்ந் தன்ன வடலருந் தானை
|
|
(உதயணனும்
பிறரும் சயந்தி நகரம்
புகுதல்) 94
- 98: உழைப்படை.........போகி
|
|
(பொழிப்புரை) பக்கத்தேயுள்ள
படையணிகளோடு இயைந்து பக்கப்படையாக அமைந்து காத்துவாராநிற்பவும்,
மிலைச்ச மன்னர்கள் தம் படையை முன் படையாக இயைத்து முற்படச் செல்லா
நிற்பவும், நல்ல பயிற்சியையுடைய படையாகிய தோழருடைய வின்மறவர் பின்
படையாக அமைந்து பாதுகாத்து வாராநிற்பவும், கடல் பொங்கி எழுந்தாற்
போன்று பிறரால் வெல்லுதற் கரிய அப்பெரும் படைகள் குறுங்காடு
செறிந்த மலைப்பக்கத்தேயுள்ள ஊர்கள் பலவற்றையும் கடந்து சென்று
என்க.
|
|
(விளக்கம்) உ.ழைப்படை - பக்கத்தே வரும்படை. யாப்பு - அணி. தலைப்படை - முன்படை.
தோழர் என்றது - இடபகன் முதலியோரை. இறும்பு - குறுங்காடு.
அடுக்கம் - மலைப்பக்கம். குறும்பு - ஊர்.
|