உரை
 
2. இலாவாண காண்டம்
 
1. நகர் கண்டது
 
         
     20     இருள்கண் புதைத்த இருங்கண் ஞாலத்து.
            விரிகதிர் பரப்பிய வெய்யோன் போல
            வெங்கண் இருட்டுயர் இங்கண் நீக்கிய
            பொங்குமலர்த் தாரோய் புகுகென் போரும்
 
        20 - 23 ;  இருள்கண் புதைத்த...........புகுகென் போரும்
 
(பொழிப்புரை) பெரிய இடத்தையுடைய உலகத்தே வாழும் உயிர்களின் கண்ணை மறைத்துத் துயர் செய்யும் இருளினைத் தனது விரிந்த சுடரைப் பரப்பிப் போக்கி இன்பஞ்செய்யும் ஞாயிறுபோல, இவ் வுலகத்தே தோன்றி உயிர்களினது வெவ்விய இருள் போன்ற துயரத்தை நீக்கியருளிய பெருமானே வருக ! என்று பாராட்டுவாரும் என்க.
 
(விளக்கம்) 20, கண் - உயிர்களின் கண்கள் என்க,. புதைத்தல்-மறைத்தல். இருங்கண் ஞாலம்-பெரிய இடத்தையுடைய உலகம். ஞாலத்துத் தோன்றிப் பரப்பிய வெய்யோன் என்க.
    21. வெய்யோன்-ஞாயிறு.
    22, பொருட்குக் கூறிய துயரத்தை உவமைக்கும் கூட்டி உயிர்களின் துயரத்தை என்க,
    23, பொங்குமலர் - தேன்மிக்குப் பொங்கும் மலர்,