|
உரை | | 2. இலாவாண காண்டம் | | 1. நகர் கண்டது | |
பயங்கெழு நன்னாடு பயம்பல தீரப்
புகுந்தனை புகன்றுநின் புதல்வரைத்
தழீஇ ஒன்னா
மன்னனை ஓடுபுறங் கண்டு 35 நின்னகர்
நடுவண் மன்னுகென் போரும்
| | 32 - 35 ; பயங்கெழு
நன்னாடு,,,.,,,,,,மன்னுகென் போரும்
| | (பொழிப்புரை) பல்வேறு
வளங்களும் பொருந்திய நல்லநாடு அவ் வளமெல்லாம் கெடும்படி,
பிரச்சோதனனாகிய பகைவேந்தன் சிறையிடைப் புக்கனை; இனிப் பெருமானே! நீ
நினது பகை மன்னனாகிய ஆருணிவேந்தனை வென்று நினது குடிமக்களை விரும்பி
அளிசெய்து நின் தலைநகராகிய கௌசாம்பியின்கண் இருந்து நீடூழி
நிலைத்து வாழ்வாயாக! என்று வாழ்த்துவோரும் என்க,
| | (விளக்கம்) 32, பயம்-பயன், ஈண்டு
வளம். 33. புகுந்தனை-சிறைபுக்கனை. புகன்று - விரும்பி. நின்
புதல்வர்-நின் குடிமக்கள். தழீஇ-அனைத்து ; அணைத்தல்,
இன்சொற் சொல்லுதலும் தளர்ந்துழி வேண்டுவன கொடுத்தலும்
முதலாயின, ''குடிதழீஇக் கோலோச்சு மாநில
மன்னன் அடிதழீஇ நிற்கும்
முலகு'' (குறள் -
244) என வரும் திருக்குறளை நினைக. 34. ஒன்னா
மன்னன்-பகை மன்னன். அவன், பாஞ்சால நாட்டரசனாகிய ஆருணி என்பவன்.
ஓடுபுறம்-தோற்றோடுங்காற் றோன்றும் முதுகு. ஓடுபுறங்கண்டு என்றது வென்று
என்றவாறு. 35. நின்நகர்-நின்னுடைய கோசம்பி நகரத்தை.
மன்னுதல் - நீடூழி நிலைபெற்று வாழ்தல். மேல்
; அம் மக்கள் வாசவதத்தையைப் பாராட்டுகின்றனர்.
|
|