|
உரை | | 2. இலாவாண காண்டம் | | 1. நகர் கண்டது | |
மாயோன் மார்பில் திருமகள் போலச்
சேயோன் மார்பிற் செல்வம்
எய்தற்கு
நோற்ற பாவாய் போற்றெனப் புகழ்நரும்
| | 36 - 38 ; மாயோன்
மார்பில்,,,, ,,,,புகழ்நரும்
| | (பொழிப்புரை) திருமால்
மார்பின்கண் வீற்றிருந்து இன்பமுறுகின்ற திருமகள்போல முருகனை ஒத்த
உதயணன் மார்பிற்றங்கி இன்பமுறுதற்கு முற்பிறப்பிலே தவஞ்செய்த
நங்கையே எம்மைப் பாதுகாத்துருள்வாயாக ! என்று புகழ்வோரும்
என்க.
| | (விளக்கம்) 36.. மாயோன்-திருமால்,
பொருட்குக் கூறிய செல்வத்தை உவமைக்குங் கூட்டுக. செல்வம் - ஈண்டு
இன்பம். 37. சேயோன்-உதயணன். உவம ஆகுபெயர்; முருகக்
கட.வுளை ஒத்தவன் என்பது கருத்து. மார்பி.ற் செல்வம்-இன்பம்.
மார்பென்றது மெய்யை. "இவ்வாறெங்கும் விளையாடிஇளையான்
மார்பின் நலம் பருகி" (சீவக. 2701)) என்றார் பிறரும்.
போற்று - போற்றுக; எம்மைப் பாதுகாப்பாயாக, தமக்கு
அரசியாகலின் அங்ஙனம் வேண்டினார்,
|
|