|
உரை | | 2. இலாவாண காண்டம் | | 1. நகர் கண்டது | |
மண்மீக் கூரிய மன்னவன் மடமகள் 45
பெண்மீக் கூரிய பெருநல வனப்பின்
வளைபொலி பணைத்தோள் வாசவ
தத்தை உளள்என
மற்றியாம் உரையிற் கேட்கும்
அவள்நலங் காண இவண்வயின்
தந்த மன்னருண்
மன்னன் மன்னுகென் போரும
| | 44 - 49 ; மண்மீக்
கூரிய......மன்னுகென் போரும்
| | (பொழிப்புரை) அகன்ற
நிலப்பரப்பினையுடைய பிரச்சோதன மன்னவன் மகளாகிய வளையலாலே பொலிவுற்ற
மூங்கில் போன்ற தோளினையுடைய வாசவதத்தை என்பாள் ஒருத்தி
இவ்வுலகினுள் வாழும் மகளிருள் வைத்து மிகப்பெருகிய பெண்மைப் பெருநலமும்
அழகும் உடையளாய்த் திகழ்கின்றனள் எனப் பிறர் பிறர் கூறும் மொழிகளை
யாம் கேட்டிருக்கின்றோம், அல்லது கண்ணாற் கண்டதில்லை, அத்தகைய
நங்கையின் பேரழகினை எங்கண்களாலே கண்டு மகிழும்படி இந் நகரத்தே
கொணர்ந்து காட்டிய வேந்தர் வேந்தனாகிய உதயணன் நீடூழி
நிலைத்து வாழ்க! என்று வாழ்த்துவோரும் என்க.
| | (விளக்கம்) 44. மீக்கூரிய மண்மன்னவன்
என மாறுக. மீக்கூருதல்-மேலும் மேலும் பெருகுதல். மீக்கூறிய என்றும் பாடம்.
இதற்கு, உலகத்தாரால் உயர்த்துக் கூறப்பட்ட
என்க, 45. மீக்கூரிய பெண் பெருநலம் என்க. ஈண்டும்,
மீக்கூறிய என்னும் பாடம் உண்டு. பெண்-பெண்மைத்தன்மை, பெகுநலம் -
பெரியநன்மை. வனப்பு-அழகு, 47.
உளளென-இருக்கின்றாள் என்று பிறர் பிறர் கூற. கேட்கும்; தன்மைப் பன்மை;
கேட்குதும்-கேட்டிருக்கின்றோம் என்றவாறு. 48. அவள் என்றது
அத்தகைய சிறப்புடைய நங்கை என்பது படநின்றது. நலம் - அழகு, இவண்வயின் -
இவ்விடத்தே. மேலே அம் மக்களுட்சிலர் இந் நிகழ்ச்சிக்கு
உறுதுணையாயிருந்த யூகி என்னும் அமைச்சனைப் பாராட்டுகின்றார்.
|
|