உரை |
|
2. இலாவாண காண்டம் |
|
1. நகர் கண்டது |
|
மாயி
காஞ்சனம் வத்தவர் இறைவற்குப்
மெருஞ்சிறைப் பள்ளியுள் அருந்துயர்
ஈன்று தீயது
தீர்ந்தத் தீப்பொருள் தீர்ந்தவன் 70
செல்வப் பாவையைச் செர்த்திச் செந்நெறி
அல்வழி வந்துநம் அல்லல்
தீர நண்ணத்
தந்தது நன்றா கியரெனக்
கண்ணிற் கண்டவன் புண்ணியம்
புகழ்நரும்
|
|
67 - 73 ;
மாயிகாஞ்சனம்........புண்ணியம் புகழ்நரும்
|
|
(பொழிப்புரை) அவ்வுயர்ந்தோர்
மெய்ம்மொழிக்கேற்ப நமது வத்தவநாட்டு மன்னனாகிய உதயணனுக்கு வருங்கால்
தீதாய் வந்த மாயிகாஞ்சனமென்னும் யானைமாயச்செயல் அவனைப்
பெரிய சிறையிடத்தே செலுத்தி்ப் பொறுத்தற்கரிய துன்பத்தைக் கொடுத்துத்
''தீதேயாகி,'' முடிந்து, பின்னர் அத் தீத்தன்மை தவிர்ந்து, அத் தீமையைச்
செய்த பிரச்சோதன மன்னன் செல்வமகளாகிய வாசவதத்தையைக் கூட்டுவித்து
மேலும் இருளிடத்தே செவ்விய நெறியிலே வந்து நம்மனோர் அல்லலும் தீரும்படி
நம்மை எய்தச் செயதது; இங்ஙனமாகத் தீதாய் வந்த அஃது ஆசில்
பெரும்பொருளாய் மேலும் நன்மையே ஆகுக! என்று கூறி அம் மக்கள்
அவ்வுண்மையைக் கேட்டன்மாத்திரையே யன்றிக் கண்கூடாகவும் கண்டு, அங்ஙனம்
வந்த தீதும் நன்மையாதற்குக் காரணமான அவ்வுதயணனுடைய பழைய
நல்வினையுடையைப் பாராட்டுவோரும் என்க.
|
|
(விளக்கம்) 67,
மாயிகாஞ்சனம்-மாயவித்தை. வத்தவரிறை; உதயணன். மாயிகாஞ்சனமாகிய
தீதாய் வந்தது முதலில் அருந்துயர் ஈன்று தீதாகவே முடிந்தது
என்க. 69. தீர்ந்து என்னும் எச்சம் இரண்டனுள் முன்னையது
முடிந்து என்னும் பொருட்டு; ஏனையது தவிர்ந்து என்னும் பொருட்டு.
70. செல்வப் பாவை - பெறற்கருஞ் செல்வம்
போன்றவளும் பாவைபோல்பவளுமாகிய வாசவதத்தை என்க. செந்நெறி -
செவ்விய்வழி. அல்வழியில் செந்நெறி வந்து என மாறிக்
கூட்டுக. 71. அல்வழி - இருள்வழி., இருள்வழி
செந்நெறியாதற்குக் காரணமும் அவன் முன்னை நல்வினையே என்பது
கருத்து. 72 நன்றாகியர் - நன்றே யாகுக. இங்ஙனமே
மேலும் நன்மையேயாகுக என்று வாழ்த்தியபடியாம்.
|