| உரை | 
|  | 
| 2. இலாவாண காண்டம் | 
|  | 
| 2. கடிக்கம்பலை | 
|  | 
| பணையெருத் தேற்றிப் பல்லவர் சூழத் தேர்திரி மறுகுதோ றூர்முழு 
      தறியப்
 40    பொலிக வேல்வலம் புணர்க 
      பூமகள்
 மலிக 
      மண்மகள் மன்னுக மன்னவன்
 மல்லன் மூதூர்ப் பல்லவர் 
      கேண்மின்
 திருவொடு புணர்ந்து தீயவை நீக்கி
 உருவொடு புணர்ந்த ஒளியினர் ஆகுமின்
 | 
|  | 
| 38- 
      44; பல்லவர் சூழத்.....ஒளியினர் ஆகுமின் | 
|  | 
| (பொழிப்புரை)   மாந்தர் பலரும் 
      புடைகுழத் தேர்கள் திரியா நின்ற தெருத்தோறும் ஊரிலுள்ளோர் எஞ்சாது 
      அறிந்துகொள்ளும்படி 'நம்மன்னன் வேல் வெற்றியாலே பொலிவுறுக! செல்வம் 
      எய்த்துக! உலகம் வளத்தான் நிறைக! அரசன்நிலைபெறுக!' என முன்னர் 
      வாழ்த்திப் பின்னர் மாந்தரை விளித்து) வளமுடைய சயந்தியில் வாழும் 
      பலரும் கேளுங்கள்! நீவிர் நன்மையோடே பொருந்தித் தீயவை கடிந்து 
      எழிலோடே சேர்ந்த புகழினையும் உடையர் ஆகுமின் ! என வாழ்த்தி என்க. | 
|  | 
| (விளக்கம்)  38 
      பல்லவர்-பலர். 39. தேர்திரிமறுகு - தேரோடுந் தெரு. ஊர்; 
      ஆகுபெயர்.
 40. வேல்வலம்-வேலான் எய்தும் வெற்றி. பூமகள் - 
      திருமகள்
 41. மலிக - நிறைக. மண்மகள்- 
      நிலவுலகம்.
 42. மல்லல் - வளம்.
 43. திரு- நல்லன.
 44. உரு-அழகு, ஒளி - புகழ்.
 |