|
உரை | | 2. இலாவாண காண்டம் | | 2. கடிக்கம்பலை | | உத்தம வேழத் துயர்புறம் பொலிய
வித்தக வெண்குடை விரகுளி
கவிப்ப
மணிக்கைக் கவரி மாபின் வீசுநர்
புடைக்களி றொருங்குடன் புகூஉம்
அகலத 65 தடைப்பமை பெரும்பொறி யாப்புமுதற்
கொளீஇப் பத்திர
மணிந்த சிந்திரக் கதவின்
வாயில் தோறும் வலத்தும்
இடத்தும்
| | 61 - 67; உத்தம
வேழத்து,.,.,,,வாயில் தோறும்
| | (பொழிப்புரை) உயர்ந்ந
இலக்கணமமைந்த யானையின் முதுகினிடத்தே அழகுறும்படி குடை கவியா
நிற்பவும், அம்முதுகிடத்தே கவரி வீசுநர் நின்று வீசா நிற்பவும், இத்தகைய
இரட்டை யானைகள் ஒரே சமயத்திற் புகுந்து செல்லுதற்கியன்ற அகலத்தோடே
அடைத்தலமைந்த பெரிய பொறியினை அடியிலே இணைத்து உருவங்கள் செதுக்கி அணி
செய்யப்பட்ட அழகிய கதவுகளையும் உடைய அப் பெருவாயிலிடந் தோறும்
என்க,
| | (விளக்கம்) 61. உத்தம
வேழம் - சிறந்த இலக்கணம் அமைந்த யானை. புறம் - முதுகு.
62. வித்தகம் - சிறந்த தொழிற்றிறம். விரகுளி -
உபாயமாக. 63. மணிக்கைக் கவரி - மணிகளாற் செய்த
காம்பினையுடைய சாமரை 64. புடைக்களிறு - இரு பக்கத்துச் செல்லும்
இரண்டு யானைகள். இரண்டு யானைகள் ஒரே சமயத்தில் புகுதற்கேற்ற அகலமுடைய வாயில் ;
கதவினையுடைய வாயில், எனத் தனித்தனி கூட்டுக. இதனாற்கூறியது, இரண்டு யானைகளின் மேலே
குடையுயர்த்தி அவ்வியானையின் முதுகின் மேனின்று சாமரை வீசா நின்றபடியே அவ்வியானைகள் ஒரே
சமயத்தில் புகுதற்கேற்ற உயரமும் அகலமும் உடைய பெருவாயில் என்பதாம்.
65 அடைப்பு - அடைத்தல்,
பொறி-இயந்திரம், பத்திரம் - உருவம்.
|
|