உரை |
|
2. இலாவாண காண்டம் |
|
2. கடிக்கம்பலை |
|
130 உண்ணுகுப் போலையுட்
கண்விரித் தியற்றிய
பாத சக்கா மாறெதிர்
நீர்தரக்
கோதைத் தாமமொடு கொட்டைமுதற் கோத்த
இலங்கொளி முக்குடை எந்நிரத் தியங்க
|
|
130-133;
உண்ணுகுப் போலையுள்.......ஏந்திரத்தியங்க
|
|
(பொழிப்புரை) பனையினது
அகமடற்குருத்தினை விரித்து வட்ட வடிவினவாய்ச் செய்யப்பட்ட
நீர்பொறிகள் ஒன்றற் கொன்று மாறுபட்டு நீரினைச் சிதறாநிற்ப;
மாலையோடு பொகுட்டின்கண் கோக்கப்பட்ட ஒளியையுடைய முக்குடையும்
பொறிகளாலே சுழலா நிற்பவும் என்க.
|
|
(விளக்கம்) 130. உள்
நுகுப்பு ஓலையுள் - பனையினது அகமடற் குருத்தோலையுள்.
131. பாதசக்கரம் - பாதம் வைக்கப்பட்ட சக்கர வடிவிற்றாய
தொரு நீர் சிதறும் இயந்திரம் என்க.
132,கொட்டை - தாமரை மலர் ,அகத்துள்ள பொகுட்டு, தாமரைப் பொகுட்டுப்
போன்று செய்யப்பட்ட பீடத்திலே கோக்கப்பட்ட காம்பையுடைய முக்குடை
என்க. முக்குடைகளாவன - சந்திராதித்தம், நித்த விநோதம்,சகலபாசனம்
என்பன.
|