|
உரை | | 2. இலாவாண காண்டம் | | 2. கடிக்கம்பலை | | கண்ணிற்
கண்ட நுண்வினைக் கம்மம் 140 கையிற் புனையுங்
கழிநுண் ணுளர் ஏட்டுணுங்
கிடையினு மூட்டமை கிழியினும்
நாற்றமுந் தோற்றமும் வேற்றுமை
யின்றி ஏற்ப விரீஇய
இலையுங் கொழுந்தும்
கொழுந்திற் கேற்ற அழுந்துபடு குலாவும்
145 குலாவிற் கமைந்த கொலச்
சந்தியும் முகிழும்
போதும் மகிழ்சுழல் அலரும்
அன்னவை பிறவும் பன்மரம்
பண்ணித் தீட்டினர்
அன்றியு நாட்டினர் நிறீஇக்
| | 139 - 148; கண்ணிற்கண்ட,,,,,.,நாட்டினர்
நிறீஇ
| | (பொழிப்புரை) கண்ணாலே
கண்டதோர் உருவினைக் கையாலே இயற்றுவதாகிய கலைத்தொழிலில் மிக
நுணுக்கமுடைய கம்மியர் ஏடு நெட்டி துணி முதலியவற்றாலே நாற்ற முதவியவற்றால்
இயற்கை மரத்தினின்றும் வேற்றுமை தோன்றாமல் செயற்கை மரங்களை
இயற்றி, அவற்றிற்கு நிறமூட்டி அங்கங்கே நட்டு நிறுத்தி என்க,
| | (விளக்கம்) 139,
''கண்டதே செய்பவாம் கம்மியர்'' என்றார் பிறரும்; (நான்மணி -
41.) 140.இத்தொழிற்கு நுண்மாண் நுழைபுலம் காரணமாதலின் ''கழி நுண்
ணாளர்'' என்றொரு பெயர் கூறினார். 141, ஏடு - இதழ்;
ஓலையுமாம். கிடை - நெட்டி. கிழி - துணி, ''கிழியினும் கிடையினும்
தொழில்பல பெருக்கிப், பழுதில் செய்வினைப் பால்கெழு மாக்களும்''
என்றார் இளங்கோவடிகளாரும்; (சிலப், 5, 33, 4,) 142,
நாற்றம் - மணம், தோற்றம் - உருவம். 143. விரீஇய -
விரிந்த. 144, அழிந்து - பதிவு,
குலா-வளைவு. 145. கோலச்சந்தி-அழகிய மூட்டுவாய்.
146. முகிழ்-மொட்டு. போது-மலர். மகிழ்-வண்டு.
147, தீட்டினர்; முற்றெச்சம். தீட்டி - நிறமூட்டி,
நிறீஇ-நிறுத்தி.
|
|