|
உரை | | 2. இலாவாண காண்டம் | | 2. கடிக்கம்பலை | | இடியுறழ் முரசின் இறைமகன் அணியும்
முடியணி ஒழிய முற்றணிப் பெருங்கலம்
160 யாவர் வேண்டினும்
யாவரு
மீமின்
ஈத்ததின் இரட்டி கோத்தரு
நுமக்கென
நாற்பெருந் திசையு நகரங் காடியுள்
வாய்த்த செய்தொழில் வாணிகர்க்
கறையும் கோப்பெரு
முதியர் வாய்ப்பறைக் கம்பலும்
| | 158 - 164; இடியுறழ் முரசின்,,,...வாய்ப்பறைக்
கம்பலும்
| | (பொழிப்புரை) அரசன்
மாத்திரம் அணியுந் தகுதியுடைய முடிக்கலன் ஒழிய, ஏனை .அணிகலன்
,அனைத்தையும்,யாவர் கேட்பினும் எல்லீரும் வழங்குமின் ! நுமக்கு நம்
மன்னன் நீயிர் வழங்கியதினும் இருமடங்கு வழங்குவன் என்று, நகரத்தின்கண்
நான்கு திசையினும் அமைந்த அங்காடியின்கண் தொழில் செய்யும்
வணிகர்க்குத் தலைமைவாய்ந்த முதுவணிகர் வாய்ப் பறையறைந்து கூறுகின்ற
ஆரவாரமும்; என்க,
| | (விளக்கம்) 161-2
முடிக்கலன் அரசர்க்குரிய அணியாகலின் அஃதொழிய என்றார். பெருங்கலம் -
பேரணிகலன் , 160, யாவர் வேண்டினும் இரப்போர் தகுதியை
அளவாது கொடுமின் என்றவாறு. 161, கோ - அரசன்,
162, அங்காடி - கடைத்தெரு. 164.
கோப் பெருமுதியர் என்றது வணிகர்குழுத் தலைமையாளரை,
|
|