|
உரை | | 2. இலாவாண காண்டம் | | 2. கடிக்கம்பலை | | வத்தவர் இறைவன் வதுவையுள் நம்மோ 175
டொத்தவர் வரிசை ஒத்துப்
புகுதலிற்
பத்திப்பட நிரைத்த பைங்குலைத்
தாறும். தேங்கின்
ஊறலுந் தேம்பிழித் தேறலும்
தாங்கரும் பெண்ணைப் பூங்குலை
அமுதமும் மதுவுஞ்
சீதமும் புதுமலர் வேரியும் 180 உக்கிர
ஊறலும் சிக்கரத்
தெளியலும் .
.. . . . . .. . . காஞ்சியத்
தெளிவும்
கரும்பின் ஊறலும்
பெரும்பொதித் தேனும்
இவையும் பிறவுஞ் சுவைதெரி
யாளர் விட்டுணல்
ஆற்றா மட்டுமலி நறுங்கள் 185
பெய்ம்மின் தம்மின் ஈமின்
பிறர்க்கெனத் தம்மில்
தோறும் உண்மகிழ்ந் துரைக்கும்
களளுண் ணாளர் ஒள்ளொலிக் கம்பலும்
| | 174 - 187 ; வந்தவர் இறைவன்.....,ஒள்ளொலிக்
கம்பலும்
| | (பொழிப்புரை) கள்ளுண்போர் தம்மில்லங்கடோறும் இருந்து, உதயணன் தி்ருமணவிழவின்கண்
பிறரெல்லாம் நம்மோடு வரிசை ஒத்தவராய்ப் புகுதலாலே அவரெல்லாம்
நம்போல மகிழ்ந்திருக்கும் பொருட்டு இளநீர்க்குலையும், தெங்கின்
கள்ளும், தேனாற் சமைத்த கள்ளும், பனங்கள்ளுன், பழச்சாற்றால் சமைத்த
கள்ளும், கரும்பினாகுற் சமைத்த கள்ஞம், மலரினின்றும் சமைத்த கள்ளும்,
உக்கிரக் கள்ளும், சிக்கரக் கள்ளும், கஞ்சியாற் சமைத்த கள்ளும்,
கருப்பஞ்சாறும், தேனும் முதலிய நறிய கள்ளினைக் கொணர்மின்! எமக்கும்
வழங்குமின்! இப் பிறர்க்கும் வழங்குமின்! என்று முன்னரே கன்ளுண்டமையானே
உண் மகிழ்ந்து கூறுதலால் எழாநின்ற ஆரவாரமும் என்க, | | (விளக்கம்) உதயணன்
மணவிழாவிற்கு நம்மோடு வரிசை யொத்து எல்லோரும் புகுதலாலே அவர்க்கும்
தாறு முதலியவற்றைக் கொணர் மின் எமக்கும் பெய்ம்மின் பிறர்க்கும்
ஈமின் என்று கள்ளுண்போர் செய்யும் ஆரவாரமும் என்றவாறு, 174, வத்தவர்
இறைவன்;உதயணன். 176. பைங்குலைத்தாறு-இளநீர்க்குலை, 177 ஊறல்-கள்,
தேறல்-கள், 178. பெண்னை - பனை தாங்குதற்கரிய வெறிதரும் பனங்கள் என்க
அமுதம்; ஆகுபெயர்; கள், 180், மது, சீதம்,வேரி, உக்கிரவூறல், சீக்கரத்
தெளியல் என்பனவும் கள் வகைகள் என்க, 181, கஞ்சியாலியற்றிய
கள், மட்டு மலிநறுங் கள்-தேனை மிகப்பெய்து சமைத்தநறிய கள் என்க.
187, கள்ளுண்ணாளர்-களிமாக்கள், ஒள்ஒலி பொருள் தெரிந்த ஒலி.
இனி, யானைப்பாகர் செய்யும் ஆரவாரம் கூறுகின்றார்.
|
|