உரை |
|
2. இலாவாண காண்டம் |
|
2. கடிக்கம்பலை |
|
நிரந்தன காட்டிய நேயந் தோன்றப்
பார்படு முத்தொடு தாருடன்
பூட்டி ஐவகை
வண்ணத்துக் கைவல் கம்மியர்
கொடியும் பத்தியும் வடிவுபட
எழுதிச் 200 சூழியும் ஓடையுஞ்
சுடர்மணிக் கோவையும்
ஊழறிந் துயர்ந்த உத்தம
உயர்ச்சிய
மண்ணுநீர் சுமக்கற்குப் பண்ணுமுறை பிழையாக்
கோல யானை நாலிரண்டு
மிகையா
ஆயிரம் அணிந்தவை கோயிலுட் டரூஉம் 205
பாகியல் உள்ளத்துப் பாகர் கம்பலும் |
|
196 - 205; நிரந்தன காட்டிய.....பாகர்
கம்பலும்
|
|
(பொழிப்புரை) தம்முள்
அன்புதோன்ற மன முதலியன ஒத்தனவும் முத்துமாலையும் மலர்மாலையும் அணிந்து
எழுதுதல் வல்ல கம்மியரானே கொடி முதவியன அழகுண்டாக எழுது வித்துச் சூழி
முதலயிவற்றையும் அணிந்து மண்ணுநீர் சுமத்தற்கு அணிசெய்யும் முறைமை
அறிந்து பண்ணூறுத்தப் பட்டனவும் உத்தம இலக்கணத்திற்குத் தக உயர்ந்த
உயர்ச் சியையுடை.யனவும் ஆகிய ஆயிரத்தெட்டியானைகள் அரண்மனையினுள்ளே
கொணராநின்ற பாகுநூல் பயின்று முதிர்ந்த யானைப்பாகர் எடுக்கும்
ஆரவாரமும் என்க,
|
|
(விளக்கம்) 196, காட்டிய
நேயம் தோன்ற நிரந்தன என்க. நிரந்தன-தம்முள் ஒப்புடையன. 197.
பார்-பருமை. தார்-மாலை. 196, ஐவகை வண்ணம் - வெண்மை கருமை பசுமை
செம்மை பொன்மை, 199 வடிவு-அழகு. 200 குழி-மத்தக அணி. ஓடை -
நெற்றிப்பட்டம்,201. ஊழ்-முறைமை. உயர்த்த- உயர்ந்த 202.
மண்ணுநீர்-மங்கல நீராடற்குரிய நன்னீர்.பண்ணுமுறை - ஒப்பனை செய்யும்வகை.
203. நாலிரண்டு மிகையா ஆயிரம்என்றது ஆயிரத்தெட்டு என்றவாறு, 204.
கோயில்-அரண்மனை. பாகு - பாகர்தொழில். (206 முதல் 235 வரை மங்கல
நீர்கொணர்தற்குரிய மகளிர்)
|