உரை
 
2. இலாவாண காண்டம்
 
2. கடிக்கம்பலை
 
            பொன்னணி கொண்டபூந்தண் சிகழிகைக்
     225     கன்னி மகளிர் கண்அணங் குறூஉம்
            ஒவ்வா அணியினர் ஒப்பக் கூடி
            மண்ணகக் கிழவற்கு மண்ணுநீர் சுமக்கும்
            புண்ணியம் உடையீர் போதுமின் ஈங்கென
            வாயில் தோறும் வந்தேதிர் கொள்ளப்
 
        224 - 229   பொன்னணி கொண்ட,,,,..வந்தெதிர் கொள்ள
 
(பொழிப்புரை) பொன்னாலாகிய அணிகலன்களால் அழகு செய்யப்பட்ட சிகழிகையை உடையாரும் கன்னிமைப்பருவத்தினரும் காண்போர் கண்ணை வருத்தும் ஒளியையுடைய பலவேறு அணிகலன்களை அணிந்தவருமாய் உதயணனுக்கு மங்கல நீர் சுமத்தற்குரிய புண்ணியமுடையீர் வருக என்று தம்மைத்தம்வாயிலிடத்தே சிலர் வந்து எதிர்கொள்ளா நிற்ப என்க,
 
(விளக்கம்) 224. சிகழிகை-கொண்டை.
    225, காண்போர் கண்ணைக் கூசும்படி செய்யும் அணி; ஒன்றினை ஒன்றொவ்வா அணி எனத் தனித்தனி கூட்டுக,
    228, போதுமின்-வம்மின் போதுமின் எனச் சிலர் வந்து எதிர்கொள்ள என்க.